anuradha nazeer

Inspirational

4.9  

anuradha nazeer

Inspirational

சாரதா தேவி சொன்ன அந்தப் பதில்.

சாரதா தேவி சொன்ன அந்தப் பதில்.

2 mins
23.5K


இவர்களை ஏன் சகித்துக்கொள்கிறீர்கள்' என்றதற்கு சாரதா தேவி சொன்ன அந்தப் பதில்.."இந்தியா முழுவதும் இருக்கும் ராமகிருஷ்ண மடங்களை ஏற்படுத்தியவர் சாரதா அன்னை. அவர்தான் விவேகானந்தருக்கும் நிவேதிதாவுக்கும் அன்னையாக இருந்து வழிநடத்தினார்."நமக்கு ஆர்வம் இருக்கிறதோ இல்லையோ, ஆசிரியர் தனக்குத் தெரிந்த பாடங்களையெல்லாம் நமக்குப் பாடமாகச் சொல்லித் தருவார். ஆனால், குரு என்பவர் நம்மை அறிந்து, நாம் எந்தத் துறையில் பிரகாசிப்போம் என்பதைத் தெரிந்து அந்தத் திசையில் நமக்கு போதிப்பார்.


ஒவ்வொருவருக்கும் ஒரு குரு கிடைத்து அவர்களை வழிநடத்தினால் அவர்களின் வாழ்க்கை சரியான திசையில் பயணிக்கும். ஆன்மிக குரு பற்றி இங்கு பகிர்ந்துகொள்கிறார். பல விஷயங்கள் என் வாழ்க்கைக்கு மிகவும் பொருத்தமானவையாகவும், எனக்கு ஆன்மிக தத்துவங்கள் பலவற்றையும் போதிப்பதாகவும் இருந்தன.இந்தியா முழுவதும் இருக்கும் ராமகிருஷ்ண மடங்களை ஏற்படுத்தியவர் சாரதா அன்னை.


அவர்தான் விவேகானந்தருக்கும் நிவேதிதாவுக்கும் அன்னையாக இருந்து வழிநடத்தினார். சாரதா அம்மையார் பள்ளிக்கூடம் சென்று படித்தவர் அல்லர். ஆனால், சகோதரி நிவேதிதாவுக்கு அவர் எழுதிய கடிதத்தை வாசித்தால், அதில் உள்ள இறைத்தன்மையையும் இயற்கையின் மேன்மையையும் நம்மால் மிகச் சிறப்பாக உணர்ந்துகொள்ள முடியும்.

'என் செல்ல மகளே நிவேதிதா...


பிரபஞ்சத்தின் இசையை, இறைவன் எல்லா ஒலியிலும் வைத்திருக்கிறான். அவை அசையும்போது அவற்றை ஒலிக்கச்செய்கிறான். அதோ தெரியும் தட்சிணேஸ்வர்... அதற்கு எதிரே இருக்கும் ஆலமரம், தன்னுடைய ஆயிரம் நாவுகளால் அந்த இசையைப் பாடுகிறது' என்று ஆலமரத்தின் இலைகளை சாரதா அன்னை அப்படிக் குறிப்பிடுகிறார். ஒரு தேர்ந்த கவிஞர்கூட எழுதிட முடியாத வரிகள். அதிகம் படித்திராத சாரதா அம்மையார் இப்படிக் குறிப்பிடுகிறார்.


அந்தக் காலகட்டத்தில் இந்தியா முழுவதும் இருந்த ராமகிருஷ்ண மடங்களுக்குத் தலைவராக சாரதா அம்மையார் இருந்தார். அப்படி இருந்தபோதிலும் தினமும் தன் தாயார் வீட்டுக்குச் சென்று, அங்கு அவர் அன்றாடம் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்து கொடுத்துவிட்டு, அதன் பிறகு மடத்துக்கு வருவதைத் தனது வழக்கமாகக் கொண்டிருந்தார்.

சாரதா அம்மையார், தனக்கு சீடர்கள் கொடுத்த சிறுதொகையை எடுத்துச்சென்று தன் வீட்டில் உள்ளவர்களிடம் கொடுப்பது வழக்கம்.அந்தப் பணத்தைப் பெறுவதற்கு அவர் வீட்டில் ஒருவருக்கொருவர் பெரிய அளவில் சண்டையிட்டுக் கொள்வார்கள். உறவினர்கள் கூச்சல், குழப்பத்துடன் ஆபாசமான வார்த்தைகளால் ஒருவரை ஒருவர் பேசிக்கொள்வார்கள்.சில வேளைகளில் அடித்துக்கொள்வதுபோல் பேசிக்கொள்வதையும் சாரதா அம்மையார் கேட்பார். ஆனாலும், வழக்கம்போல் இவர் அங்கு பாத்திரங்களைத் தேய்ப்பது, தானியம் தயாரிப்பது போன்ற வேலைகளில் ஈடுபட்டுவிட்டு மீண்டும் மடத்துக்குப் புறப்பட்டுவிடுவார்.இதைப் பார்த்த சாரதா அம்மையாரின் சீடர்களுக்கு மிகுந்த கோபம் வரும். உலகம் முழுவதும் உள்ள மக்களால் பாராட்டப்படும் சாரதா அம்மையார் தன் வீட்டில் ஒரு வேலைக்காரியைப்போல் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்துகொண்டிருப்பது அவரின் சீடர்களுக்கு மிகுந்த கோபத்தைத் தந்தது.ஒருமுறை சாரதா அம்மையார் தனது வீட்டில் வேலைகளைச் செய்துகொண்டிருந்தபோது, அவரின் சீடர்களில் ஒருவர் அவர் வீட்டின் பின்புறம் வழியாக வீட்டுக்குள் வந்தார். 'அம்மா, நீங்கள் எவ்வளவு பெரிய இடத்தில் இருக்கிறீர்கள். எங்கள் குரு ஶ்ரீ ராமகிருஷ்ணரின் மனைவி. நீங்கள் எவ்வளவு உயர்ந்த பீடத்தில் இருக்கிறீர்கள். அப்படிப்பட்ட உயர்ந்த இடத்தில் இருக்கும் உங்களுக்கு இது ஏன்? இவர்கள் போடும் சண்டையை எல்லாம் நீங்கள் எப்படிச் சகித்துக்கொள்கிறீர்கள்?' என்று கேட்டார்.'இது இப்படித்தான் இருக்கும். இந்த உலகம் இப்படித்தான் இருக்கும். இதன் நடுவில்தான் நம்முடைய வேலைகளை நாம் செய்துகொண்டு போக வேண்டும்' என்றார் சாரதா அம்மையார். அப்போது அந்தச் சீடர் எதேச்சையாக அன்னையை நிமிர்ந்து பார்க்க, அன்னை பராசக்தியின் வடிவமாகவே அவரின் கண்களுக்குக் காட்சி அளித்தார் சாரதா அம்மையார்.

'இது இப்படித்தான் இருக்கும். இந்த உலகம் இப்படித்தான் இருக்கும்' எனச் சாரதா அம்மையார் சொன்ன இந்த வார்த்தைகள், மரத்தடியில் அமர்ந்திருக்கும் அந்த வங்காளப் பெண்மணியுடையது அல்ல... சாட்சாத் அந்தப் பராசக்தியேதான்' என்று இதுபற்றி எழுதுகிறார் அந்தச் சீடர்.


Rate this content
Log in

Similar tamil story from Inspirational