anuradha nazeer

Inspirational

4.8  

anuradha nazeer

Inspirational

அம்மா கொடுத்த யோசனைதான் மூலிகைத் தேநீர்.

அம்மா கொடுத்த யோசனைதான் மூலிகைத் தேநீர்.

2 mins
23.6K


கொரோனா ஊரடங்கால் தொழில் முடங்கிப்போனதால், புதுச்சேரி கடற்கரைச் சாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு சீரகம், தேன், இஞ்சி, புதினா கலந்த மூலிகைத் தேநீர் விற்கத் தொடங்கியிருக்கிறார் எம்.சி.ஏ பட்டதாரி இளைஞர் சுரேஷ்.

இந்தியாவில் தீவிரமடைந்துவரும் கொரோனா தொற்று கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தையும் வேலைவாய்ப்புகளையும் ஒருசேர பறித்திருக்கிறது. ஊரடங்கின்போது மூடப்பட்ட பல நிறுவனங்கள், தற்போது ஊரடங்கு தளர்வுக்குப் பின்பும் கூட திறக்க முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன.

சிலர் அந்தத் தொழிலையே விட்டுவிட்டு வேலை தேடி வீதி வீதியாக நடக்க ஆரம்பித்திருக்கின்றனர். அதேசமயம் பல இளைஞர்கள் பழைய சூழலுக்குக் காத்திருக்காமல் புதிய முயற்சிகளைச் செய்து நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த நம்பிக்கை மனிதர்களில் ஒருவர்தான் புதுச்சேரியைச் சேர்ந்த எம்.சி.ஏ பட்டதாரி சுரேஷ்.


பத்து ரூபாய்க்கு மூலிகை நீர்புதுச்சேரி பொறியியல் கல்லூரியில் எம்.சி.ஏ படிப்பை முடித்த சுரேஷ், சொந்தமாக லேப்டாப்களை சர்வீஸ் செய்யும் நிலையத்தை நடத்திவந்தார். கொரோனா ஊரடங்கால் இவரது தொழிலும் முடங்கியது. நிலைமை எப்போது சீராகும் என்று யோசித்துக்கொண்டிருக்காமல், அம்மா கொடுத்த டிப்ஸுடன் தேன், இஞ்சி, சீரகம், புதினா கலந்த சூடான மூலிகைத் தேநீர் கடற்கரைச் சாலையில் விற்க ஆரம்பித்திருக்கிறார்.

புதுச்சேரி கடற்கரைச் சாலையில் காலை 6 மணியளவில் சுரேஷைச் சந்தித்தோம். தனது வாடிக்கையாளர்களுக்குச் சூடான மூலிகைத் தேநீர் தயாரித்துக் கொடுத்துக் கொண்டிருந்த சுரேஷ், அவர்கள் தரும் டிப்ஸையும் குறிப்பெடுத்துக் கொள்கிறார்.


நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார். ``புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் எம்.சி.ஏ முடித்துவிட்டு, ஐ.டி கம்பெனி ஒன்றில் நெட்வொர்க் இன்ஜினீயராக வேலை பார்த்தேன். அதன்பிறகு தனியாக கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப்களை சரிசெய்யும் நிலையத்தை நடத்திவந்தேன். அந்த நேரத்தில் தனியார் கல்லூரிகள் மற்றும் பயிற்சி மையங்களில் ’ஹார்டுவேர்’ வகுப்புகளை எடுப்பது, ஆல்பம் பாடல்கள், குறும்படங்கள், எடிட்டிங் போன்றவற்றையும் செய்வேன். அதனால் வருமானத்துக்குச் சிரமமில்லாமல் இருந்தது.

ஆண்ட்ராய்டு உலகம் விரிவடைந்ததால் கொரோனாவுக்கு ஒரு வருடத்திற்கு முன்பிருந்தே வருவாய் எனக்குக் குறைய ஆரம்பித்தது. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் கொரோனாவுக்குப் பிறகு சாப்பாட்டுக்குப் பத்து ரூபாய்க்குக்கூட வழியில்லாமல் போனது. ஒரு பக்கம் கடைக்கு 4,000 ரூபாய் வாடகை, கரன்ட் பில் 2,000, இன்டர்நெட் பில் 1,000 எனக் கட்ட வேண்டும்.


இந்த நிலைமைச் சீராக எப்படியும் குறைந்தது 6 மாதங்களாவது ஆகும் என்று தோன்றியது. அதுவரை சாப்பாட்டுக்கு என்ன செய்வது, வாடகையை மொத்தமாக எப்படிக் கொடுப்பது? அதனால் அந்தக் கடையைக் காலி செய்துவிட்டு எங்கேயாவது வேலைக்குப் போகலாம் என முடிவெடுத்தேன். ஆனால் நான் விசாரித்தவரை தற்போது 12 மணிநேர வேலை, 50 சதவிகிதம்தான் சம்பளம்தான் வழங்கப்படுகிறது.

அம்மா கொடுத்த யோசனைதான் மூலிகைத் தேநீர். அதற்கு முன்பு டீ கேனுடன் சாலையில் என்னால் நிற்க முடியுமா என்று என்னையே நான் சுயபரிசோதனை செய்துகொள்ள நினைத்தேன்.பட்டதாரி இளைஞர் சுரேஷ்ஆனால் அந்த வேலைகூட தற்போது குதிரைக் கொம்பாக மாறிவிட்டது. அதனால் குறைந்த முதலீட்டில், வருமானத்துக்குப் புதிதாக எதையாவது செய்ய வேண்டுமென்று யோசித்தேன். அப்போது அம்மா கொடுத்த யோசனைதான் மூலிகைத் தேநீர். அதற்கு முன்பு டீ கேனுடன் சாலையில் என்னால் நிற்க முடியுமா என்று என்னையே நான் சுயபரிசோதனை செய்துகொள்ள நினைத்தேன். அதன்படி டீ கேன் ஒன்றை வாடகைக்கு எடுத்து என் வண்டியில் தேன், சீரக நீர் போன்றவற்றை தனித்தனியே எடுத்துவந்து தயாரித்துக் கொடுத்தேன்.


முதல் நாளிலேயே அதற்கு ஓரளவுக்கு வரவேற்பு இருந்ததால் எனக்குக் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. அதேபோல எனது வாடிக்கையாளர்கள் கொடுத்த டிப்ஸ்கள் மூலம் எனது மூலிகைத் தேநீரின் தரத்தையும் மேம்படுத்தியிருக்கிறேன். 250 மில்லி மூலிகை நீரை பத்து ரூபாய்க்குக் கொடுக்கிறேன். 250 மில்லி அளவுக்குக் கீழே குடித்தால் நம் உடலுக்கு அது வேலை செய்யாது.முதல்நாளில் வெறும் பத்துத் தேநீர்தான் விற்பனை ஆனது. தற்போது 30 வரை விற்கிறது. விரைவில் இந்த எண்ணிக்கை கண்டிப்பாக உயரும். சுயதொழிலில் விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும்தான் முக்கியம். கஷ்டப்பட்டு படித்துவிட்டு, அதற்கேற்ற வேலை கிடைக்கவில்லை என்று சோர்ந்திருக்கும் நண்பர்களுக்கு நான் சொல்வது இதுதான். புதிதாகச் சிந்தித்து, அசிங்கம் பார்க்காமல் கஷ்டப்பட்டு உழைத்தால் வாழ்வில் முன்னேறலாம்” என்கிறார் நம்பிக்கையுடன். 


Rate this content
Log in

Similar tamil story from Inspirational