ஆனந்தக் கண்ணீர்
ஆனந்தக் கண்ணீர்


நான் தொலைக்காட்சி நிலையத்தில் 38 ஆண்டுகள் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ளேன் .
ஆனால் என் வாழ்க்கையில் எத்தனையோ விதமான சந்தோஷ நிகழ்ச்சிகள் மனதில் பதிவாகி உள்ளன .
ஆனால் என் வாழ்க்கையில் கடைசியாக எனக்கு கிடைத்த ஒரு சந்தோஷ நிகழ்வு என் தொழில் மூலம் என்று கூறலாம். அதை இங்கு பதிவு செய்கிறேன்.
2013 வது வருடம்.
மத்திய சர்க்காரின் பலவிதமான அலுவலகங்களில்இருந்தும் ஒரு மிகப் பிரம்மாண்டமான போட்டி ஹிந்தி மொழியில். என் வாழ்க்கை பூரா போட்டி என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும் .எல்லா விதமான போட்டிகளிலும் பங்கு கொண்டு பரிசு பெறுவேன். அது கட்டுரைப்போட்டி ஆக இருக்கட்டும் பேச்சுப்போட்டி ஆக இருக்கட்டும்
கவிதைப்போட்டி ஆகட்டும் பாட்டுப்போட்டி ஆகட்டும் கதை எழுதும் போட்டி. படம் பார்த்து ஹிந்தியில் வர்ணனை செய்து கதை எழுதுதல்
இப்படி எல்லாவற்றிலும் பங்குகொண்டு நான் பரிசு பெறுவேன்.போட்டி என்றாலே ஒரு பிடி பிடித்து விடுவேன்.
போட்டியாளர் கூட்டம் எக்கச்சக்கமாக இருந்தது.கட்டுரை போட்டி. நடந்த இடம் புரசைவாக்கம் பல அலுவலகங்களில் இருந்தும் ஏராளமான போட்டியாளர்கள்.
போட்டி என்பதால் ஒரே கூட்டம். எழுதினேன், எழுதினேன், எழுதிக் கொண்டே இருந்தேன். இந்தப் போட்டி டெல்லியில் திருத்தப்பட்டு தான் பரிசு கொடுப்பார்கள். இதில் நம் தமிழ்நாடு விசேஷ புரஸ்கார் தமிழ்நாட்டிலிருந்து பங்கு பெற்றவர்களின் விசேஷ போட்டியாளர் என்ற தலைப்பில் எனக்கு ஒரு மிகப்பெரிய கேடயம் கிடைத்தது.
எப்பொழுதுமே எனக்கு தன்னம்பிக்கை மிகவும் அதிகம். என்றாலும் போட்டியாளர்களை தேர்வு செய்து அவர்கள் டெல்லியிலிருந்து கடிதம் எழுதியபோது மனம் அளவிலா சந்தோஷமானது. அலுவலகம் மூலம் டெல்லியில் தங்குமிடம், டெல்லிக்கு போகவரவிமான டிக்கெட் மற்றும் TA,DA எல்லாம் கிடைத்தபோது மட்டற்ற மகிழ்ச்சி.
ஆனாலும் டெல்லி சென்று நான் அந்த பரிசைப் பெற்ற போது என் கணவன், என் மகன் முன்னால் வாங்கியபோது கண்களில் பொல பொலவென்று ஆனந்தக் கண்ணீர் கொட்டியது.
இன்றளவும் என்னால் மறக்கவே முடியாது.
என் வாழ்வில் ஒரு பொன்னாள் ஆகும்.
என் அலுவலகம் மூலம் எவ்வளவோ பரிசுகள் பெற்றிருந்தாலும் இந்தப் பரிசு ஒரு வாழ்நாள் சாதனையாளர் பரிசு போல்தான் பாவிக்கிறேன்.
என் தொலைக்காட்சி நிலையத்திற்கு கோடான கோடி நன்றிகள்.