விடையறியா கேள்விகள்
விடையறியா கேள்விகள்
முகிலைப் பிரிந்து
இலைகளின் மடியில்
விழுந்த மழைத்துளி
மீண்டும் ஒன்றாகிவிடும்
முகிலவனோடு
உன்னை பிரிந்ததால்
கண்ணீர்த்துளிகளை
சிந்தும் எந்தன் கண்கள்
மீண்டும் என்னை
உன்னோடு சேற்பிக்குமா??
என் விடையறியா கேள்விகளின்
விடையாக என் முன் தோன்றுவாயா??
