வேண்டும் ஓர் வரம்
வேண்டும் ஓர் வரம்
உன் சுவாசம் படும்
தூரத்தில் நான் இருக்க
உன் பார்வை அறிந்து
நித்தமும் நான் நடக்க
உன் குறும்பு புன்னகையில்
மனம் தன் வசம் இழக்க
உன் அருகாமையில்
என் வானமெங்கும்
வானவில் தோன்ற
சத்தமில்லா முத்தத்தை
என் கன்னங்கள் பெற
கற்பனையில் நான்
வாழ்ந்த நாட்களை
காவியமாய் இயற்றிட
வேண்டும் ஒரு வரம்.

