மழையே.....
மழையே.....
சின்ன சின்ன தூரல்களில்,
என்னை அள்ளி செல்லும் நீ,
தூரலுடன் தென்றலாய்,
என்னை தழுவி செல்லும் நீ,
தென்றலுடன் மண் வாசனையாய்,
என்னில் வாசம் வீசும் நீ,
மண் வாசனையில் நதியாய்,
என்னில் பெருக்கெடுக்கும் நீ,
நதியின் ஓட்டமாய்,
என்னில் ஓடும் நீ,
ஒவ்வொரு பருவ மழையிலும்,
என்னை சிலிரக்க
தான் வைக்கிறாய்.....
