ஊர்த்தாவிகள்
ஊர்த்தாவிகள்


ஓயாத பேருந்துகளின் இரைச்சல்
எங்கோ ஒரு மூலையில்
இளையராஜா இசை மிடுக்காக பாடுகிறது
இந்த தை மாதப் பனியின் அடர்வுகள்
எலும்புகளின் உள்ளூரச் செருகுகின்றன...
அந்த பேருந்து நிறுத்தக் கட்டில்
கிழிந்த வேட்டியுடனும் சீலையுடனும்
கைகால்கள் சுருக்கி நெளித்து
நடுங்கியே தூங்கும் மக்கள் சிலர்
தூரத்தில் எதையோ அல்லது யாரையோ
கண்டு ஊளையிடும் நாய்கள்...
நிரம்ப குடித்த குடிமகனின் உலரல் ஒருபுறம்
அந்நேரத்திலும் நாலு கடலை விற்று
காசு பார்க்க நினைக்கும் அன்றாடங்காட்சிகளும்...
ஊர்த்தாவும் ஆட்கள் மட்டும்
எதையும் கண்கொண்டு பார்க்கவில்லை
பேருந்தின் பேர் பலகையையும் இருக்கையையும் தவிர.