தியானம்
தியானம்


ஆழமான சுவாசம்,
அட்டகாசமான ஆரம்பம்.
அடடா! நடுவே தடுமாற்றம்.
மறிபடி ஒரு புதிய துவக்கம்.
மனதில் நேற்றைய வினாக்கள்,
பதிலை தேடும் எண்ணங்கள்.
நடுவே மறந்து போனது,
தியானத்தின் அனைத்து நோக்கங்கள்.
அடடா! முகநூலை பார்க்கவில்லை!
என்ற எண்ணம் விடவில்லை.
ஆனாலும் தியானத்தின் ஆசை,
மனதில் ஓயவில்லை.
தெடுந்தொடரின் ரோஜா,
செய்தாள் தாஜா.
வந்த
காஜா,
நம்மை தூக்க வைத்தான் கூஜா!
மற மற என மனம் அலற,
சரி சரி என எண்ணவோட்டம் கதற,
மணியை பார்த்து அறிவு பதற,
உடல் ஒத்துழைக்காமல் சிதற...
தியானமே வேண்டாம் என்று,
மனம் நொந்தது இன்று.
ஆனால் சுலமான ஒன்று,
செய்யலாம் நன்று.
செய்யும் வேலையே தியானம்.
அதை செய்வோம் தினம்.
அலைபாயும் மனம்,
இதை உணரும் நிஜம்.