பாட்டன் பாரதி கண்ட கனவு
பாட்டன் பாரதி கண்ட கனவு
பாட்டன் பாரதி சொன்னது
ஏட்டிற்கு மட்டுமே பாப்பா
சாதி களையவில்லை விண்ணென
மேலோங்கி நிற்கிறது பாப்பா
சான்றோன் அன்று
சான்றோனிடத்தும் மய்யமது பாப்பா
சுயசிந்தனை சுருங்கி சமநீதி
தத்துவம் மட்டுமே பாப்பா
சமநீதி கொள்கை மனதில்
ஊற்றென பெறுக வை பாப்பா
மரபணுக்கள் அற விதைகளை
திணித்து விடு பாப்பா
வரும் சந்ததி பேதைமையை
அறவே களைந்து விடும் பாப்பா
சாதிகள் களைத்து விடு
பாட்டன் பாரதி கண்ட கனவை
நிலைக்க வித்திடு பாப்பா