நீயாக வேண்டும்
நீயாக வேண்டும்
என்ன நேரம் இது?
புது தென்றலின் உரசலில் பூக்கிறேன்!
எங்கோ கேட்கும் பாடல்,
வரிகள் மட்டும் உனக்கா?
என் எண்ணங்கள் முழுதும்
ஒரு உலகமாய் என்னை சுற்ற,
சூரியனாய் சூழ்கிறாயா!
எத்தனை தேடல்,
எத்தனை ஆராய்ச்சி?
உன்னில் முடிக்கிறேன் என் முனைவர் படத்தை!
உனக்காக என்று எனக்காக எழுகிறேன்
உன்னை எனதாக்க எண்ணி!
எவ்வளவு கனவுகள்
எவ்வளவு ஏக்கங்கள்
அளவற்று அணைக்கிறேன்!
அனைத்தும் நீயனாய்!
வேண்டாம் என்றாலும் அது நீ
வேண்டும் என்றாலும் அது நீயாக வேண்டும்!
உன்னில் என்னை காண,
காலமெல்லாம் காத்திருக்க கரைந்தது காதலில்!
காணும் நொடியில் மௌனம் இருப்பின்,
மேகம் வானவில் பார்க்குமோ!

