STORYMIRROR

Harini Ganga Ashok

Drama Inspirational Others

4  

Harini Ganga Ashok

Drama Inspirational Others

மறக்கவியலா நொடிகள்

மறக்கவியலா நொடிகள்

1 min
211

முடிவறியா இப்பயணத்தில்

இருக்கும் நொடிகளை

இன்பமாக களிக்கவே

எண்ணம் கொண்டிருந்தேன்

விடிந்த அந்த காலை

அமைதிக்கு பதில்

பயத்தை அளித்தது

வரையறுக்க இயலா

சோகம் வந்து

குடியேறியது

அன்று ஜனித்த மலர் கூட

இறுதி மூச்சை சுவாசித்தது

முகம் அறியா உறவுகளுக்கும்

மனம் வேண்டி கொண்டது

மனிதன் மடிந்து கொண்டிருக்கும் அதே நேரத்தில்

மனிதநேயமும் பிறந்தது

பல உள்ளங்களில்

மனிதன் மறந்தவற்றை

இயற்கை எடுத்துரைத்தது

இழப்புகள் நேர்ந்தாலும்

இளைப்பாற இடமும் கிடைத்தது

நினைப்பது போல்

வாழ்க்கை அத்தனை

எளிதல்ல என்பதை

புரிய வைத்து சென்றது

நாம் கடந்து வந்த நாட்கள்

எல்லை எதுவரை

என்பதை புத்திக்கு

உரைத்துப்போனது

குறைகளிலும் நிறைகளை

காண பழக்கப்படுத்தியது

பழைய நினைவுகளை

மீட்டி சென்றது

பலரது வாழ்வில்

ஒவ்வொரு உயிருக்குள்ளும்

மாற்றத்தை கொண்டு வந்தது

ஒரே வருடத்தில்

அனுபவத்தில் இருந்து

கற்றுக்கொள்வது

என்றும் மறவாத

ஒன்றல்லவோ

மனம் இருக்கும் இடத்தில்

மனிதநேயமும் இருத்தல் 

வேண்டும்

மன உறுதி இருந்தால்

அனைத்தையும் கடந்து

வரலாம் என்னும்

எண்ணத்தையும்

விதைவித்து சென்றுள்ளது

அன்பின் தூறல்கள்

இனியும் நீள வேண்டும்

நம்பிக்கை புதிதாக

உதிக்கவும் செய்தது

முறிந்து போன உறவுகளிற்கு

சிறிது மகிழ்ச்சியும்

கிடைக்க செய்தது

ஒவ்வொரு இரவிற்கு பின்னும்

ஒளிக்கதிர்கள் பிரகாசிக்க

செய்தது!!


Rate this content
Log in

Similar tamil poem from Drama