காத்திருந்த காதல்
காத்திருந்த காதல்
ஒரு முறையேனும் சொல்லிவிடு
மௌனமான மார்கழி இரவில்
எனை தீண்ட மறுத்த
உன் விழிகளின் காதல் ஆழத்தை
தாரமாய் என்னருகில் இல்லாமல்
பாரமாய் போனதேனடி கண்மணி
பறவையாய் மாற துடிக்கிறேன்
உன்னை சுற்றியே வட்டமிட
நெஞ்சத்தில் ஊஞ்சலாடுகிறது
உந்தன் பூமுகம்
விடையறியா கேள்வியாக
உனை கரம் பற்ற
காத்திருக்கிறேன் ஏக்கப்பார்வையோடு...

