இரவு நிலவு ..
இரவு நிலவு ..


நீக்கமற நிறைந்திருக்கிறது நிலவு
நிறைவின்றி, நிம்மதியின்றி
விட்டம் பார்த்தமர்ந்து
வேதனை தீர்க்க விளையும்
விட்டில் பூச்சி மனசு
மாந்தர்கள்
தொலையா கவலைகளை
விடியா இரவுகளில்
அமாவாசை அந்தகாரமாய்
அமிழ்த்தும் சிக்கல்களோடு
அலமலந்து கிடக்க
சற்றும் சலனமின்றி
சம்போக போகியைப்போல்..