எல்லை
எல்லை
சிந்திய வேர்வைத்துளிகள்
ஒவ்வொன்றும் தங்கமாய்
மின்னுகிறது அவன் முன்னால்
சற்றும் தோன்றவில்லை
தான் என்ற கர்வம்
கடந்த கால கஷ்டங்கள்
நினைவில் இன்னும் இருப்பதால்
மொத்தமாய் தூக்கி
கொடுத்துவிடுவதில்லை
நல உதவி என்று
பணம் பத்தும் செய்யும் என்பதால்
அவன் கண்ட கனவுகள்
அனைத்தும் மெய்யானது
அனைத்திற்கும் எல்லைகளை
அவன் வகுத்துக்கொண்டதால்...
