ஏட்டு சுரைகாய் கறிக்கு உதவாது
ஏட்டு சுரைகாய் கறிக்கு உதவாது
பள்ளிக்கு போயிருக்கன்
பகல்லெல்லாம் படிச்சுருக்கேன்
பட்டதாரி ஆகிபுட்டன்
பட்டினத்தில் வேலைப்பெற்றேன் !
பட்டினியாய் இருக்கும்போது
பசித்த வயிற் உறுமும் போது
பச்சரிசியை வடிக்கத்தெரியாம
பதறிப்போய் முழித்த போது ...
பள்ளிக்கூட வாசமில்ல
பட்டம் கிட்டம் வாங்கவில்ல
பச்சரிசி வெந்தபின்ன
பக்குவமா வடிச்செடுத்து
பசித்தீக்க தெரிஞ்ச பாட்டி
பக்கத்தில் வந்து நின்னா
பைய என் காதில் சொன்னா
"எட்டு சுரைக்காய் கறிக்கு உதவாதுன்னு"!!!