Mathan S

Horror Fantasy Thriller

4  

Mathan S

Horror Fantasy Thriller

தூக்கில் தொங்கும் அந்நியன்

தூக்கில் தொங்கும் அந்நியன்

2 mins
1.1K


தமிழில் வழங்குபவர்: அஸ்sembலர்

அத்தியாயம் - 1

தொங்கும் உடல்

மாலை ஐந்து மணியளவில் எட் லாய்ஸ் குளித்துவிட்டு, தொப்பி மற்றும் கோட்டை அணிந்துகொண்டு, அவரது காரில் ஏறி அமர்ந்துகொண்டு வெளியே சென்று நகரத்தின் மறு பகுதியில் இருக்கும் தனது தொலைக்காட்சி விற்பனை கடையை நோக்கி சென்றார்.


அவர் சோர்வாக இருந்தார். அவரது வீட்டின் அடித்தளத்திலிருந்து மண்ணையும் அழுக்கையும் தோண்டி சுத்தம்படுத்தி அதனை தள்ளுவண்டியில் குவித்து பின்புற முற்றத்தில் கொட்டியதினால் அவரது பின்புறம் மற்றும் தோள்கள் வலித்தது. ஆனால் ஒரு நாற்பது வயது மனிதன் அதை செய்வதென்றால் அது மெச்சத்தக்கதுதான்.


ஜேனட், அந்த வேலையை கூலிக்கு ஆள் வைக்காமல் அவரே செய்ததால் அவர் சேமித்த பணத்தை வைத்துக்கொண்டு ஒரு புதிய பூ வைக்கும் அலங்கார குவளை ஒன்றை அவளால் வாங்க முடியும்; மற்றும் அவரின் வீட்டின் அஸ்திவாரங்களை அவரே சரிசெய்யும் யோசனை அவருக்கு பிடித்திருந்தது!


நகரம் இருட்டாகிக்கொண்டிருந்தது. அஸ்தமிக்கும் சூரியன் நீண்ட கதிர்களை அவர்கள் மீது வீசியது - நடைபாதையில் சோர்வாக நடக்கும் மற்றும் கடுமையான முகம் கொண்ட பயணிகள் மீது, மூட்டை முடிச்சுகளை தூக்கி செல்லும் பெண்கள் மீது, மற்றும் கூட்டமாக பல்கலைக்கழகத்திலிருந்து வீட்டிற்குச் செல்லும் மாணவர்கள் மீது, குமாஸ்தாக்கள், வணிகர்கள் மற்றும் மந்தமான உடை அணிந்து செல்லும் பெண் செயலாளர்கள் மீது. அவர் தனது ஃபோர்ட் காரை ஒரு போக்குவரத்து சிவப்பு நிற விளக்கிற்காக நிறுத்தினார்.


பச்சை விளக்கு எரிந்தவுடன் மீண்டும் காரை தொடக்கினார். அவர் இல்லாமலே கடை திறந்திருந்தது; இரவு உணவிற்காக சமையல்காரரிடம் என்னென்னவென்று கூறிவிட்டு, அன்றைய வியாபாரம் என்னவென்று எழுதிவைத்திருக்கும் பதிவுகளை ஒரு பார்வையிட்டுவிட்டு, ஒரு சில தொலைக்காட்சி பெட்டிகளை கூட விற்க நேரம் இருக்கும் என்று நினைத்தார். அவர் தெருவின் மையத்தில் இருக்கும் பச்சை நிற சிறிய சதுரத்தை மெதுவாக கடந்தார், அது நகரத்தின் சிறிய பூங்கா.


லாய்ஸ் தொலைக்காட்சி விற்பனை மற்றும் சேவை கடைக்கு முன்னால் பார்க்கிங் இடங்கள் இல்லை. அவர் தனக்குள் சபித்துக்கொண்டு காரை யு-டர்ன் செய்தார். மீண்டும் அவர் அந்த பச்சை நிற சிறிய சதுரத்தையும், அதனுள் இருக்கும் தனிமையான பொதுக் குடிதண்ணீர் ஊற்றையும் மற்றும் நீண்ட மர பெஞ்ச்சயும், ஒரு ஒற்றை விளக்கு கம்பத்தையும் கடந்து சென்றார்.


விளக்கு கம்பத்திலிருந்து ஏதோ ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. வடிவமற்ற இருண்ட மூட்டை, காற்றில் கொஞ்சம் ஊசலாடிக்கொண்டிருந்தது. ஒருவித போலி பொம்மை போல. லாய்ஸ் அவரது காரின் ஜன்னலை கீழே இறக்கி வெளியே எட்டிப் பார்த்தார்.


அது என்ன? ஒரு கண்காட்சிக்கான ஏதோ ஒரு சில வகையா? சில நேரங்களில் வர்த்தக சபை கண்காட்சிக்காக சில விளம்பரங்களை அந்த சதுர பூங்காவில் தொங்கவிடுவார்கள், அதுவா?

மீண்டும் யு-டர்ன் செய்து தனது காரை சுற்றி கொண்டு வந்தார். அவர் பூங்காவைக் கடந்து சென்று அந்த இருண்ட மூட்டையை கூர்ந்து பார்த்தார். இது ஒரு போலி பொம்மை அல்ல. ஆனால் கண்காட்சிக்காக வைக்கப்பட்ட ஒரு பொருளாய் இருந்தது என்றால் அது ஒரு விசித்திரமான வகை தான். அவரது கழுத்தின் பின்னால் உள்ள ரோமங்கள் சிலிர்த்தன, அவர் அசௌகரியமாக எச்சிலை விழுங்கினார். அவரது முகத்திலும் கைகளிலும் வியர்வை சொட்டியது.

அது ஒரு உடல். ஒரு மனித உடல்.

* * * * * * * * * *


Rate this content
Log in

Similar tamil story from Horror