Vadamalaisamy Lokanathan

Fantasy

4  

Vadamalaisamy Lokanathan

Fantasy

ராஜ்ஜியம்

ராஜ்ஜியம்

1 min
382


விடியல் காலை.மணி மூன்று,சிவராமன் தம்பதிக்கு அழகான ஒரு ஆண் மகன்.அதுவும் பரணி நட்சத்திரம். பரணியில் பிறந்தவன் தரணி ஆள்வான் என்பது பொது மொழி.

இந்த நூற்றாண்டில் அப்படி ஒரு வாய்ப்பு இருக்க சந்தர்ப்பம் இல்லை,எதிர்காலம் எப்படி இருக்குமோ.

சிவராமன் தன் பிள்ளை,

பெரியவன் ஆகி ஒரு நல்ல நிலையில் இருந்தால் போதும் என்று. மட்டும். எண்ணிக்

கொண்டான்.

மகனுக்கு லோகேஷ் என்று பெயர் சூட்டி,ஆரம்பம் முதலே பிரபல பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார்.

லோகேஷ் படிப்பில் கெட்டிக்காரன்.

கல்வியில் அவனுடைய வளர்ச்சி அப ரிதமாக இருந்தது.

பிரபல பல்கலை கழகத்தில்  

விண்வெளி ஆராய்ச்சியில் பெரிய படிப்பு படித்து முடிக்கும் போது,அமெரிக்காவில் இருந்த வந்த ஒரு நிறுவனம் அவனை

ஆண்டுக்கு பத்து கோடி ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு எடுத்துக்கொண்டது.


அந்த நிறுவனத்தின் திட்டமே விண்வெளியில்,ஒரு தங்கும் விடுதி கட்டி சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க வேண்டும் என்பது தான்.

லோகேஷ் தான் அதன் தலைமை நிர்வாகி.அந்த நிறுவனம் கேட்டுக்கொண்டது போல,

துவக்கத்தில் இரண்டு குடும்பம்,அதாவது பத்து பேர்,தங்கவும்,உணவருந்தும்,அவர்களுக்கு உதவியாக ஒரு ஐந்து பணியாளர்களும் வசிக்க தக்க முறையில் ஒரு விண்வெளி வீட்டை உருவாக்கினான்.அவர்கள் விரும்பும் உணவு,பூமியில் தயார் செய்து சுவை குறையாமல் அரை மணி நேரத்தில் விண்வெளி வீட்டில்கிடைக்குமாறுவிண்வெளியில். பறக்க வாகனம் தயார் செய்தான்.


ஒரு நன்னாளில் அதன் திறப்பு விழா கோலாகலமாக தொடங்கியது.முன்பதிவு சுமார் ஒரு வருடத்திற்கு அன்றே நடந்து முடிந்து விட்டது.

கட்டணமும் ஆரம்பத்தில் பூமியில் தங்குவதை விட இரண்டு மடங்கு தான் அதிகம்.அதனால் முன்பதிவு கேட்டு நிறைய பேர் வந்து கொண்டு இருக்க,மேலும் சில நாடுகள்,அதில் முதலீடு செய்ய முன்வர,அது போல நூறு வீடுகள் தயார் ஆகி,ஒரு சின்ன ராஜ்ஜியம் உருவாகியது.

லோகேஷ் அதற்கு சிவலோகம் என்று அந்த ராஜ்ஜியதிர்க்கு

பெயரிட்டான்.

இப்போது விண்வெளியில் ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்கி அதை ஆண்டு வரும் லோகேஷின் தந்தை அதை பார்க்க உயிரோடு இல்லை.

இருந்தாலும் பரணியில் பிறந்தால் தரணி ஆள முடியும் என்று லோகேஷ் நிரூபித்து விட்டான்.



రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్

Similar tamil story from Fantasy