பகிர்ந்து
பகிர்ந்து


ஒரு சமயம் சாந்தி சாந்திபிணி முனிவரிடம் ஆசிரமத்தில் கிருஷ்ணர் அவரது அண்ணன் பலராமன் மற்றும் சுதாமன் மூவரும் குருவுடன் வசித்து வந்தனர்.
ஒருமுறை கிருஷ்ணனும் பலராமனும் காட்டிற்கு விறகு கொண்டு வருவதற்காக குருவால் அனுப்பப்பட்டனர்.
பின்னர் குருவின் மனைவி சுதாமரை
மூன்று பேரும் உண்பதற்காக மொத்தமாக கடலைப்பருப்பு அனுப்பினார்கள்.
மூன்று பேருக்கும் உண்டான கடலைபருப்பு கொடுத்து காட்டிற்கு அனுப்பி வைத்தாள். ஆனால் அந்த கடலைப்பருப்பை மறைத்து அவர்களிடம் அது பற்றி கூறவில்லை.
பின் கிருஷ்ணர் தனக்கு தாகம் எடுக்கிறது தண்ணீர் வேண்டும் என்று கேட்டார். அதற்கு சுதாமர் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிக்கக்கூடாது .
எனவே நாம் சற்று இளைப் பாறலாம் என்று சுதாமர் கூறினார்.
சுதாமர் மடியில் தலையை வைத்து சற்று கண்ணயர்ந்தார் .
அப்போது மூன்று பேருடைய கடலைப்பருப்பு களைத் தான் மட்டும் தின்ன ஆரம்பித்தார்.
சற்று நேரத்தில் கிருஷ்ணர் எல்லாம் அறிந்தவர் சர்வ வியாபி சுதாமரை பார்த்து
நீ மட்டும் என்ன செய்கிறாய்?நீ மட்டும் என்ன சாப்பிடுகிறாய்?
என்ன சத்தம்? என்று கேட்டார்? அதற்கு சுதா இந்த காட்டில் நன்மையாக முடியும் .
அதற்கு சுதாமர் இந்தக் காட்டில் என்ன மண்ணையா திங்க முடியும் ?நான் ஒன்றும்
திங்க. இல்லையே?
எனக்கே குளிரால் பற்கள் கடகடவென்று அடித்துக் கொண்டிருக்கின்றன.
என்னால் விஷ்ணு சகஸ்ர நாமத்தை கூட சரியாக பாராயணம் செய்ய முடியவில்லை என்று பொய் கூறினார்.
உடனே கிருஷ்ணரும் நான் ஒரு கனவு கண்டேன்.
அதில் மற்றவரின் உணவுப்பொருள்களை ஒரு நண்பன் தி ன்பதாக கனவு கண்டேன் .
அதான் கேட்டேன். வேறொன்றுமில்லை என்று சிரித்தார்.
எனக்கு எதையும் தராமல் நீ தின்ன மாட்டாய் எனக்கு நன்றாய்த் தெரியும்.
ஆனால் கனவில் கண்ட ஞாபகத்தில் நீ என்ன என்கிறாய் என்று கேட்டேன் என்றார். கிருஷ்ணரின் மதிப்பு தெரியாத சுதாமர் தன் செய்கைக்காக வருந்த நேரிட்டது.
மற்றவர்களுடன் பகிர்ந்து உண்ணாது தனியாகத் தின்போர் இக்கதையை நினைவில் கொள்ள வேண்டும்.