anuradha nazeer

Comedy Drama

4.7  

anuradha nazeer

Comedy Drama

நகைச்சுவை

நகைச்சுவை

1 min
12K



பேராசிரியர் வெகு சுவாரசியமாகக் குறுந்தொகைப் பாடலொன்றுக்கு விளக்கம் தந்துகொண்டிருந்தார். நாங்களும் கவனச்சிதறல் சிறிதுமின்றிப் பாடம் கேட்டுக்கொண்டிருந்தோம்.


அதே பாடவேளையில் இருமுறை சுற்றறிக்கை கொண்டுவந்த அலுவலகப் பணியாளர், மூன்றாவது முறையாக ஒரு புதிய சுற்றறிக்கையுடன் வந்தார்; அதைப் பேராசிரியரிடம் நீட்டினார்.


பாடல் கருத்தை விளக்குவதில் மனம் ஒன்றியிருந்த பேராசிரியர், சற்றே சலிப்புணர்வுடன்[மென்மையான மனம் படைத்தவர். எந்தவொரு சூழலிலும் பிறர் மனம் நோக நடந்துகொள்ளாதவர்] “என்னய்யா நீ, நான் பாட்டுக்கு என் பாட்டுக்கு[பாடு - வேலை] குறுந்தொகைப் பாட்டை நடத்திட்டிருக்கேன். நீ பாட்டுக்கு உன் பாட்டுக்காக[சுற்றறிக்கை கொண்டுசெல்வது அவர் பாடு] வந்து வந்து என் பாட்டைக்[பாடம் நடத்துவது] கெடுக்கிறாயே” என்று சொல்ல, சற்று நேரம் நாங்கள் மனம் விட்டுச் சிரித்ததோடு, சூழ்நிலைக் கேற்ற அவரின் நகைச்சுவைப் பேச்சை வெகுவாக ரசித்தோம்.


Rate this content
Log in

Similar tamil story from Comedy