Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

anuradha nazeer

Abstract Drama

5.0  

anuradha nazeer

Abstract Drama

மகிமை

மகிமை

1 min
22


தற்போது சுட்டெரிக்கும் அக்னி நட்சத்திர வெப்பத்துக்கு அவரவர் புதுப்புது ஏசிகளை வாங்கிச் செல்லும் நிலையில், திண்டிவனம் அருகே ஏசியின் மூலம் மூன்று பேர் பலியான சம்பவம் மக்களிடையே அச்சத்தையும் பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 


திண்டிவனத்தில் காவேரிப்பாக்கம் பகுதியில் உள்ள சுப்பராய பிள்ளை தெருவில் வசித்து வந்துள்ளனர் .ராஜ் குடும்பத்தினர். ராஜு தனது மூத்த மகனான கோவர்த்தனனுக்கு சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்துள்ளார். தற்போது தன் இளைய மகனான கௌதமனுக்கு (30), திருமணம் நடைபெறுவதாக இருந்துள்ளது. திருமணத்துக்கான அனைத்துப் பணிகளையும் முழுவீச்சில் செய்து வந்துள்ளனர் ராஜ் குடும்பத்தினர். நேற்று வழக்கம்போல் திருமண ஏற்பாடுகளை செய்து முடித்துவிட்டு அசதியில், இரவு ஏசியை ஆன் செய்துவிட்டு தன் மனைவி கலைச்செல்வி என்ற கலா(52) மற்றும் தன் இளைய மகன் கௌதமனுடன் ஒரே அறையில், அறையைப் பூட்டிவிட்டு உறங்கியுள்ளார் ராஜ். அதே வீட்டில் மற்றொரு அறையில் தன் மூத்த மகனும் அவரின் மனைவியும் உறங்கியுள்ளனர்.


அதிகாலை 3 மணியளவில் ஏசி இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதின் காரணமாக ராஜ், அவரின் மனைவி மற்றும் அவரின் மகன் ஆகிய மூவரும் உடல் கருகி உயிரிழந்தனர். வெடித்த சத்தம் கேட்டுப் பதறி ஓடி வந்த கோவர்த்தனன் மற்றும் அவரின் மனைவி, அக்கம் பக்கத்தினர் செய்வதறியாது திகைத்துள்ளனர். பின்னர் விரைந்து வந்த திண்டிவனம் காவல் நிலைய காவலர்கள் இறந்தவர்களின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.


மூத்த மகன் அவனுக்கு கொடுத்த எல்லா கரைத்து விட்டான் மிச்சம் மீதி சொத்துக்களை தனது இளைய மகனுக்கு எழுதி வைத்திருந்தார் பெரியவர் இதனை கண்டு பொறுக்காத மூத்த மகனும் மனைவியும்மிச்சம் மீதி சொத்துக்களையும்சொத்துக்களையும்தாங்கள் அனுபவிப்பதற்காக ஏசி மிஷினின் ஒயரை கட் பண்ணிவிட்டுமின்கசிவால் மூன்று பேரும் இறந்ததாக நாடகமாடி விட்டனர் இதனை போலீசார் விசாரணையில் கண்டுபிடித்துமூத்த மகன் மனைவிக்கு தண்டனை கொடுத்துள்ளனர்காசு பணத்திற்காக பெற்ற தாய் தகப்பனை கொள்ளும் இந்த கலிகாலத்தில் மகிமையை என்னவென்று சொல்லுவது!


Rate this content
Log in

More tamil story from anuradha nazeer

Similar tamil story from Abstract