Vadamalaisamy Lokanathan

Fantasy

4  

Vadamalaisamy Lokanathan

Fantasy

இறுமாப்பு

இறுமாப்பு

1 min
260


தன்னை விட்டால் அறிவாளி யாரும்

இல்லை என்ற இறுமாப்புடன் கால் மேல் கால் போட்டு அமர்ந்து இருந்தான் வீரசேனா.அறிவில் அவனை வெல்ல யாரும் இல்லை தான்.கல்வி கற்றவன் அவன் ஒருவனே.சொற்களை கையாளுவதில் அவ்வளவு புலமை.

யாரும் அவனுடன் பேச பயப்படு வார்கள்.

ஒரு நாள் ஒரு சிறுவன் வந்தான்.

வீர சேனா வை பார்த்து

கடவுளை பார்த்து இருக்கிறீர்களா என்றுகேட்டான்.இல்லையென்றால் சொன்னால் அவமானம்,பார்த்தேன் என்று சொன்னால் ஆதாரம் கொடுக்க வேண்டும்.

சற்று தடு மாற்றத்தில் இருந்தான்.

சரியான பதிலை சொல்ல வேண்டும்.

அந்த சிறுவன் மீண்டும் இதோ என் பக்கத்தில் நிற்கிறார்,உங்கள் கண்ணுக்கு புலப்படவில்லை?

என்று மீண்டும் கேட்டான். தன் தோல்வியை ஒப்பு கொள்ளும் நேரம் வந்து விட்டது.ஒரு சிறுவனினடம் தோற்று போவதா.


வீர சேனா மனம் ஆறவில்லை.

வேறு வழியில்லை,ஒத்து கொண்டு தான ஆக வேண்டும்.ஒரு கணம் யோசித்து,இறைவா இந்த இக்கட்டில் இருந்து காப்பாத்து என்று மனதுக்குள் வேண்டி கொண்டான்.

ஒரு வேளை இறைவன் குழந்தை வடிவில் வந்து கேள்வி கேட்டு கொண்டு இருக்கிறாரா.

உடனே மூளையில் ஒரு மின்னல் தோன்ற,அந்த சிறுவனை பார்த்து

நீங்கள் தான் அந்த கடவுள் என்று கூற,அந்த சிறுவன் மாயமாக மறைந்தான்.

வீர சேனா விற்கு இப்போது தான் புரிந்தது,ஆணவம் இருக்க கூடாது.

எப்போதும் கால் மேல் கால் போட்டு அமரும் பழ க்கத்தை மாற்றி கொண்டான்.


రచనకు రేటింగ్ ఇవ్వండి
లాగిన్

Similar tamil story from Fantasy