யார் எந்தன் கண்ணாளனோ !
யார் எந்தன் கண்ணாளனோ !
யார் எந்தன் கண்ணாளனோ !
அவன் காந்த கண்ணில் விழுந்து
அவன் கை வளைவினுள் மெய் சிலிர்த்து
என் விழிகள் படபடக்க
அவன் கண்களை நோக்கி
என் இதயம் சிறகடிக்க
அவன் இமையுள் ஆழ்ந்து போனேனே
தப்பிக்க வழிகள் இருந்தும்
என் மனம் தடுக்கிறதே
இது காதலா
ஒரு நாள் மன்னவன்
என் வாழ்நாள் மன்னவன் ஆவானோ
இல்லை ஒரு தலையாக என் காதல்
மண்ணில் சாயுமோ
இது யார் பிழை என் கள்வனே !

