வாழ்க்கையின் திசை
வாழ்க்கையின் திசை
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
![](https://cdn.storymirror.com/static/1pximage.jpeg)
எதையோ தேடிக் கொண்டு,
வானத்தினை நிமிர்ந்து பார்க்கும் போது,
அழகாய் காற்றின் திசையில் அமைதியாய்,
தான் விரும்பிய வடிவங்களில்,
எந்தவொரு பதற்றமும் இல்லாமல்,
சென்று கொண்டிருந்த மேகங்கள் தான்,
என் கண்ணில் தெரிந்தது.....
உந்தன் வாழ்க்கையின் திசையில் செல்,
என்பது போல் இருந்தது.....
ஏனோ அதனை கண்டதும்,
மனம் அமைதியை உணர்ந்ததும் உண்மையே......