தாய்மை
தாய்மை
கருவில் உருவாக ஆரம்பித்த உடனே,
உன்னை பற்றி ஆயிரம் கனவுகள்,
உருவாகி விடுகிறது,
ஒவ்வொரு முறையும் உன்னை,
தொட்டு பார்க்கும் போது,
உணர்கின்ற உணர்வு,
யாராலும் எனக்கு தந்திட இயலாது,
உந்தன் சின்ன சின்ன அசைவுகள்,
உணர்த்துகின்ற அமைதியை,
எனக்கு யாராலும் கொடுத்திட இயலாது.....
தாய்மை என்ற உணர்வே,
எனக்கு பெரிய வரமாய் தந்தவன் நீயல்லவா,
எந்தன் வாழ்வின் மொத்த அர்த்தத்தையும் விலங்க வைத்தவன்....
என் விலைமதிப்பில்லா குழந்தை....
