Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

Chriseeda Shinny

Action Classics Fantasy

4.8  

Chriseeda Shinny

Action Classics Fantasy

புறம் பேசாதே !

புறம் பேசாதே !

1 min
261


அறம் செய்யாவிடினும் 

புறம் பேசாதே ! - உதவிக்

கரம் நீட்டாவிடினும் 

புறம் பேசாதே !

நேரில் சிரித்து 

புறம் பேசாதே ! - நீ

மனதில் பகைத்தும்

புறம் பேசாதே ! 

பொய்யாக நடித்து 

புறம் பேசாதே ! 

மெய்யாக பகைத்தும்

புறம் பேசாதே !

கண் எதிரே குறை பேசினாலும்

புறம் பேசாதே ! 

மனதில் நிறை எண்ணினாலும் 

புறம் பேசாதே !

நன்மையைப் பாராட்டாவிடினும் 

புறம் பேசாதே ! 

தீமையைக் கண்டிக்காவிடினும் 

புறம் பேசாதே !

மற்றவர் குறைகளைப்

புறம் பேசாதே ! 

கற்றவர் நிறைகளையும்

புறம் பேசாதே ! 

மகிழ்ந்து நடித்து 

புறம் பேசாதே ! - நீ

இகழ்ந்து போற்றி 

புறம் பேசாதே ! 

அயலார் குற்றத்தைப்

புறம் பேசாதே ! - பிறர்

உன் குற்றத்தையும் 

புறம் பேசுவார் - என்று 

மறந்து விடாதே !



Rate this content
Log in