முடிவு
முடிவு
முடிவு என்பது,
எப்போதும் முடிவு அல்ல,
அது மற்றுமொரு நிகழ்வின் தொடக்கத்தை உருவாக்கி விட்டே முடிகிறது,
அந்த தொடக்கம் எவ்வாறு வேண்டுமானாலும் இருக்கலாம்,
முடிவினை கண்டு ஏற்க பயந்தால்,
அதனால் உருவாகும் தொடக்கத்தை அறிய இயலாது,
இதனால் ஏற்பட போகும் அனுபவத்தையும் புரிந்துக் கொள்ள முடியாமல் போய் விடும்,
முடிவு, தொடக்கம் இரண்டுமே காதலர்கள் போன்றது,
முடிவு இல்லாமல் தொடக்கம் இல்லை,
தொடக்கம் இல்லாமல் முடிவும் இல்லை,
இவற்றை நம்மால் பிரிக்க இயலாது...
பிரித்து வைக்க நினைத்தாலும், நடவாதது...
இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று கலந்தது....
இவற்றில் ஏதேனும் ஒன்று இல்லை என்றாலும்,
மற்றொன்றை உணர முடியாது...
எனவே, எந்த முடிவானாலும் ஏற்றுக் கொள்ளுங்கள்......
