STORYMIRROR

B KARTHEKA

Thriller

4  

B KARTHEKA

Thriller

மனித ஓநாய்

மனித ஓநாய்

2 mins
407


அது ஒரு சிறிய கிராமம்.தியா வும் அவள் தங்கையும் அவர்களுடைய அப்பாவுடன் வசித்து வந்தனர். தியா கிராமத்திற்கு அருகில் இருக்கும் கல்லூரியில் படித்து வந்தாள். தியாவுக்கு அம்மா இல்லாததால் அவளுடைய அப்பா அவளை கட்டுக்கோப்பாக வளர்த்து இருந்தாள். கல்லூரியில் தியா வுக்கு நண்பர்களே இல்லை எனலாம். தியாவுக்கு படிப்பில் நாட்டம் அதிகம்.நூலகத்தில் எதாவது புத்தகத்தை படித்து கொண்டு இருப்பாள். 


ஒரு முறை அவளுடன் படிக்கும் மாணவி கவிதாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக அவள் வீட்டிற்கு சென்றிருந்தாள். கவிதாவின் வீட்டில் எல்லா மாணவ மாணவிகள் இருந்தனர். கவிதாவின் வீடு காட்டிற்கு பக்கத்தில் இருந்தது. சில மாணவிகள் வினோத சத்தத்தை எழுப்பி கொண்டு இருந்தனர். விமலா " ஊஊஊ...... என்று ஊளையிட்டாள்.தியா " போதும் நிறுத்து .எனக்கு பயமா இருக்கு " . 


அப்போது டமார் னு சத்தம் கேட்டது. தியா " என்ன சத்தம் அது " என்றாள். விமலா " எல்லாத்துக்கும் பயப்படு " என்றாள். உடனே கவிதா " நேரமாச்சு வாங்க வீட்டுக்கு போலாம் " என்றாள். அப்போ தியா " அங்க பாரு செடியெல்லாம் ஆடுது" என்றாள்.அதற்கு கவிதா " அங்க ஒன்றும் இல்ல... வா போலாம் " என்றாள். 


கவிதா முன்னே செல்ல பின் தொடர்ந்தாள் தியா . விமலா நின்று அங்கேயே பார்த்து கொண்டு இருந்தாள். " ஆஆ காப்பாத்துங்க " இது விமலா வின் குரல். தியா விமலாவின் கையை பற்றினாள். தியாவின் முதுகில் ஏதோ கடித்தது போன்று இருந்தது. அவள் முதுகை தடவினாள். அப்போ விமலாவை காட்டிற்குள் ஏதோ இழுத்து சென்றது. செடியின் மறைவில் எதையோ பார்த்து திகைத்து நின்று இருந்தாள் . உடனே கவிதா " வா தியா பொய் போலீஸ் ல சொல்லலாம் " என்றாள் .இருவரும் ஓடினர்.


இருவரும் போலீஸ் ஸ்டேஷன் சென்றனர். இன்ஸ்பெக்டர் பரமசிவம் தான் பார்த்து கொள்வதாக சொல்லி இருவரையும் வீட்டிற்கு போக சொன்னார். போலீஸ் சம்பவ இடத்திற்கு சென்று விமலாவை தேடினர். விமலாவை கண்டுபிடிக்க முடியவில்லை. தியா வீட்டிற்கு வந்தாள் . மிகவும் களைப்பாக இருந்தது. அவளுடைய முதுகில் வலி ஏற்பட்டது . கண்ணாடியில் பார்த்தாள். ஏதோ கடித்தது போன்று இருந்தது. தூக்கம் கண்ணை இருக்க தூங்கி போனாள். 


மறுநாள் அந்த ஊர் ஆற்றங்கரையில் விமலாவின் உடல் கிடைத்தது. போலீஸ் வந்தனர். விமலாவின் உடலை ஏதோ கடித்தது போன்று இருந்தது. அவள் உடலில் உயிர் இல்லை. கவிதாவும் தியாவும் அழுதனர். போலீஸார் அவளுடைய பெற்றோருக்கு ஆறுதல் கூறினர். தியாவுக்கு வாந்தி வந்தது. அவள் வீட்டிற்கு சென்றாள். அப்படியே தூங்கி விட்டாள். 


கவிதா பல முறை போன் செய்தும் எடுக்காததால் தியா வீட்டிற்கு சென்றாள். போலீஸ் விமலா உடலை பிரதேத பரிசோதனைக்கு அனுப்பினார். விமலாவின் உடலை பரிசோதித்த மருத்துவர் விமலாவின் உடலை கடித்தது ஒரு ஓநாய் என்றார் ஆனால் கடித்த தடம் சிறியதாய் இருக்கு .அப்ப விமலாவை கடித்தது மனித ஓநாய் (werewolf) 


தியாவுக்கு மோப்ப திறன் அதிகமா இருந்தது. சின்ன சவுண்ட் கூட கேட்டது. தியா பயப்பட ஆரம்பிச்சா . அப்ப கவிதா ஏன் என் போன் ஏ பிக் பண்ணல னு கேட்டாள் . அதற்கு தியா உடம்பு சரி இல்லனு சொன்னாள் .அப்ப கவிதா " சரி இன்னைக்கு நைட் செமினார் இருக்கு. நம்ம காலேஜ் கானபெரென்ஸ் ஹாலில் . மறக்காம வந்துரு. நடந்ததையே நினைச்சுட்டு இருக்காத " என்றாள். கவிதா கிளம்பிட்டாள் .

  

அன்று இரவு தியா செமினார் அட்டென்ட் பண்ண காலேஜ்க்கு போனாள்.அப்ப ரெம்ப உடம்பு வலிச்சது. அவ கையில நகம் முளைச்சது.அவளுக்கு இப்ப புரிய ஆரம்பிச்சது தான் ஒரு மனித ஓநாய் ஆக உணர்ந்தாள் .காலேஜ் ஏ விட்டு கிளம்ப நினைக்கும் போது கவிதா வந்தாள் . கவிதா விடம் பேசாம கிளம்ப அவள் தியாவின் கையை பிடித்தாள். அன்று முழு நிலவு .தியா மனித ஓநாய் ஆகவே மாறிருந்தாள் . கவிதாவை கடித்து குதற ஆரம்பித்தாள் ....அங்க இருந்த எல்லாரும் தப்பிக்க ஆரம்பித்தனர். தியா நிறைய ஸ்டூடெண்ட்ஸ் அ கடித்தாள் . இன்ஸ்பெக்டர் வந்து பாதிக்க பட்டவர்களை எல்லாம் ஹாஸ்பிடல் கு அனுப்புனாரு. மயக்க ஊசி போட்டு தியா வ பிடிச்சு வேன்ல போட்டு காட்டுக்கு அனுப்புனார்..... 


முற்றும்..... 



  


Rate this content
Log in

More tamil poem from B KARTHEKA

Similar tamil poem from Thriller