மகளிர் தினம் பற்றிய கவிதை
மகளிர் தினம் பற்றிய கவிதை
உடலும் , மனதும் சோர்வுறுகையில்
அன்னையின் மடியில் தலை சாய்க்கும் ஒவ்வொரு நாளும் சொர்க்கம் தான்!
வாழ்க்கையில் வெற்றி கண்டாலும்,
துவண்டு மருகி நின்றாலும்
மனைவியின் அன்பு நிலைத்து விட்டால்
வாழ்நாளெல்லாம்
சொர்க்கம் தான்!
வேலை முடித்து அசந்து
வருகையிலே மகளின் கரங்கள் வருடிவிடுகையிலே
தோன்றும் இன்பம் சொர்க்கம் தான்!
அறிவைப் புகட்டி கண்டிக்கும் ஆசிரியையின் அறிவுரை கூட சொர்க்கம் தான்!
மனதில் நிலைத்து, உடன் நின்று உள்ளம் காக்கும் தோழிகளின் கரம் பிடித்து நடப்பதுவும் தோழமையான சொர்க்கம் தான்!
பெண்ணே நீயும் தினந்தோறும் மெழுகாய் உன்னை உருக்கிக் கொண்டு
இருட்டுக்கு
வெளிச்சம் தருகின்றாய்!
உன்னை மதித்து மட்டுமன்றி நினைத்து, புரிந்து வாழும் வரை
வாழ்க்கை முழுதும் சொர்க்கம் தான்!
மதிக்கும் பொழுது பூப்போன்றும்,
தீமை நடக்கும் பொழுதில் புயல் போன்றும் பொங்கி எழுந்து வா பெண்ணே!
துணிந்து எழுந்து வீறு நடை கொண்டு வலம் வந்திடு பெண்ணே!
பூமி உன்னால் மலரட்டும்.
புன்னகைப் பூவாய் சிரிக்கட்டும்!
புதிய சரித்திரம் படைத்திட
புதுமை கொண்டு புதினமாக எழுந்து வா பெண்ணே!
இன்று மட்டும் உன் தினமல்ல!
என்றும் உந்தன் தினம் தானே!
பொன்னால் நகைகள் தேவையிவ்வை
புரிதல் மட்டும் போதுமன்றோ!