மகிழ்ச்சி
மகிழ்ச்சி
மகிழ்ச்சியாய் இருப்பதற்கு,
காரணங்களை தேடிக் கொண்டிருந்தால்,
அந்த காரணங்களின் வீரியம் குறையும் போது,
நம் உள்ளத்தின் ஊவகையும் தொலைந்துதான் போய்விடுகிறது,
காரணங்களை தேடிக் கொண்டே இருந்தால்,
உண்மையான மகிழ்ச்சியின் சுகத்தினை அனுபவிக்க முடியாது,
மகிழ்ச்சியினை உங்களிடமே தேடுங்கள் கிடைக்கும்....
