STORYMIRROR

Shakthi Shri K B

Drama Classics Children

4  

Shakthi Shri K B

Drama Classics Children

என் வாழ்வின் நிறங்கள்

என் வாழ்வின் நிறங்கள்

1 min
299

நீ பிறந்த முதல் நொடியில் உன்னை என் மடியில் சுமந்த போது, 

உன் அழகிய கண்களில் தெரிந்தது சூரிய வெளிச்சம் போன்ற சிவப்பு நிறம்.

நீ வளர வளர என் அன்பும் உன் மேல் வளர்ந்துக்கொண்டே போகுது,

உன் மெல்லிய புன்னகையில் என்னக்கு தெரிந்தது மாசற்ற வெள்ளை நிறம்.

நீ பேசுகையில் மெய்மறந்து நின்றேன் நான்,

உன் மழலை மொழியில் தெரிந்தது என்னக்கு பசுமையான பச்சை நிறம்.

நீ நடந்து செல்லுகையில் உன் சிறு கால்களின் வேகம் என்னை அமைதி செய்தது,

உன் நடையின் திறனின் தன்மையில் கண்டேன் கம்பிராமன கருமை நிறத்தை,

நீ ஓடி ஆடி விளையாடுவது என் கண்ணுக்கு விருந்தாக இருந்தது,

உன் விளையாட்டு செயலில் பார்த்தேன் ஒரு வெற்றிகரமான மஞ்சள் நிறத்தை.

நீ என்னிடம் அன்பு செலுத்தி என்னை மகிழ்விக்கும் போது, 

உன் அன்பில் நான் அனைத்து வண்ணகளையும் பார்கிறேன்,

உன் மேல் ஒரு அன்னையாக நான் வைத்திருக்கும் அன்பைவிட,

நீ என் மேல் வைத்திருக்கும் அன்பை பார்த்து வியக்கிறேன் நான்,

இதே போல தினமும் நீ இருந்தால் என் வாழ்வில் அனைத்து நாட்களும் ஹோலி பண்டிகை தான்,

என் அன்பு மகளே உன்னை ஒரு நாளும் நான் பிரிய மாட்டேன்,

உன்னுடன் இருக்கும் ஒவ்வொரு நாளும் என் வாழ்வின் ஹோலி நாட்களே.



இந்த உள்ளடக்கத்தை மதிப்பிடவும்
உள்நுழை

Similar tamil poem from Drama