சிறகிழந்த பறவை
சிறகிழந்த பறவை
சாரல் மழையாய் அணைத்தாயே,
சிறகிழந்த பறவையை,
காலங்கள் மாறினாலும்,
மெல்லிய காதல் சுவடுகளோ மறையாது,
அன்று அகதியாய் வாடியவன்,
இன்று உன் மேல் படர்ந்தானே கொடியாக,
அன்று தீீீப்பந்தம் போல் சுழன்றவன்,
இன்று வாடினானே தனிமையில்,
பாசமும் பிரிவும் விதியாகிட,
இன்று திரிந்தானே நடைப்பிணமாக,
சாரல் மழையாய் ஏன் அணைத்தாயே,
சிறகிழந்த பறவையை..