Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Hemalatha P

Inspirational

5.0  

Hemalatha P

Inspirational

அன்பு உள்ளம்

அன்பு உள்ளம்

1 min
285


கண்ணை இமைக்கச் செய்யாத அழகு

என்னை ஈர்க்கும் ஒரு ஈர்ப்பு

புரியாத புதிர்

என்னை வசப்படுத்தும் ஒரு மந்திர கயிர்

உலகத்தை ஆளும் அளவிற்கு சக்தி

கத்தியை விட கூர்மையான புத்தி

சிரிக்கும் போது சித்திரம்

எங்களை மகிழ்விக்கும் மாய மந்திரம்

பார்வையில் உண்மை

மனதளவில் நேர்மை

எதற்கும் தயங்காத ஒரு துணிவு

மற்றவர்களிடம் பணிவு

ஆடம்பரத்தில் அடக்கம்

அவர்களை வெல்ல முடியாத அவர் ஒரு தங்கப் பதக்கம்

நடையில் ஜான்சி ராணி

நடனத்தில் நங்கைக்கரசி

பேச்சில் தெளிவு

புரிந்துக் கொள்வதில் மிகத் தெளிவு

அரவணைக்கும் ஒரு அன்னை

அன்பைக் காட்டுவதில் தந்தை

பழகும் போது தோழி

கண்டிக்கும் அன்பு ஆசிரியர்

அவரின் ஓசையே தனி

அதை கேட்டால் அன்பாக மாறும் பேய் முனி

பாடம் சொல்லித் தரும் போது தெய்வம்

அவர் இருக்கும் இடமே புனித ஆலயம்

எறும்பை விட சுறுசுறுப்பு

வேலைகளை செய்யும் போது விறுவிறுப்பு

அமைதியான அருவி

அறியாமையால் சிக்காத சிட்டுக் குருவி

வாண்வீட்டில் இருக்க வேண்டிய தேவதை

இங்கு வந்து எங்களுடன் வாழவேண்டிய சூழ்நிலை

இது என்ன தேவதைக்கு வந்த சோதனை

சோதனையை சாதனையாக்கிக்

கொண்டிருக்கும் ஒரு சாமாநியி

பார்த்தவுடன் கைகூப்பி வணங்க வைக்கும் திருவிழா தேர்

ஐம்பூதங்களின் சக்தியை ஐவிரலில் அடக்கி வைத்திருக்கும் அன்பு அன்னை

நிலத்தை போல எதையும் தாங்கும் இதயம்

நெருப்பை போல நீரை அழிக்கும் ஒரு மாயை

காற்றைப் போல மனங்களை குளிர்விக்கும் ஒரு தோழி

அனைத்து நற்குணங்களையும்

பொதிந்து

இவ்வுலகிற்கு அனுப்பப் பட்ட

இறைவனின் குழந்தை

இவ்வுலகில் ஒரு தூய அன்னையின்

கருவிலிருந்து ஜனித்த ஒரு உயிர்

இவ்வுலகிற்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு

அவரே எங்களின் தேவதை

எங்களுக்கு ஆசிரியராக கிடைத்த அழகு தாமரை

அவரை எங்களால் மறக்க முடியாது

எங்கள் இதயங்களால் வெறுக்க முடியாது

எங்கள் உயிர் எங்களை விட்டு பிரிந்தாலும் அவரை மறக்க முடியாது

இதை நீங்கள் ஏற்றுக் கொண்டாலும் ஏற்றுக் கொள்ளாவிடினும்

உங்களுக்காக என்றும் நாங்கள்

எங்கள் உடல் இறைவனுக்கு அர்பனம்

எங்கள் உயிர் உங்களுக்கு சமர்பனம்.



Rate this content
Log in

Similar tamil poem from Inspirational