அழகு
அழகு


அழகு என்றால் என்ன? அகத்தை அறிவதா, புறத்தில் தெரிவதா, அழகு என்பதற்கு விளக்கம் ஒரு வரியில் கூறமுடியாது, அதற்கு ஒரு விளக்கம் தான் என்றும் கூறிவிடமுடியாது.
அழகை தீர்மானிப்பதற்கு எந்த கோட்பாடுகளும் கிடையாது, இந்த உலகில் இருக்கும் ஒவ்வொரு உயிருக்கும், ஒவ்வொரு இடத்திற்கும், ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒர் அழகு இருக்கிறது அதைப் பார்ப்பதற்கே நமக்கு விழிகளை அருளியிருக்கிறார் இறைவன்.
அப்படியான அழகை வெறும் ஒற்றை பார்வையில் பார்த்துவிட முடியாது, வேறு எப்படி பார்க்கவேண்டும் என்று கேட்டால், ஒன்று சொல்வேன், உன் முககண்களால் காணாது அக கண்களால் நோக்குவதே சிறந்த வழியாகும். ஆகையால் இந்த இயற்கை தந்த அழகை கண்டு நல்வாழ்வு வாழ்வோம்.