STORYMIRROR

Maragatham Sundar

Abstract Inspirational

4  

Maragatham Sundar

Abstract Inspirational

அச்சம் தவிர்

அச்சம் தவிர்

1 min
383

தேக்கு மரம் கடைந்து

செய்ததொரு தொட்டிலிலே,

ஈக்கள் நுழையாது

இட்ட திரை நடுவினிலே,

புதியதோர் விடியலாய்,

பொற்குவிப் புதையலாய்,

பூத்திட்ட புதுமலரே,

பொன்னே,என்கண்மணியே,

பாட்டெடுத்துப்

பாடினான் பாவேந்தன் பாரதியும்

அச்சம் தவிர் என,

அறிவாயோ மாணிக்கமே?

பாரதத் தாய் பெற்றெடுத்த

புத்திரர் தம் பரம்பரைக்கு,

வீரம் அது எந்நாளும்

விலை மருந்துச் சரக்கல்ல

‘அச்சம் தவிர்‘ என

அறை கூவல்செய்தான்,

அந்தப்பாட்டினுக்கோர்

புலவனவன், பைந்தமிழ்ப் பாவாணன்

அவன் நாவினில் மீட்டிய

பொன் வீணையின் நாதமும்,

இன்பத் தேனாய்ப் பாய்ந்தது

என் செவியினிலே,

எழுத்தில் சிங்கத்தின் குரலினை,

பாய்ச்சுகின்றான் பாரதி.

அச்சம் தவிர் என்ற நாதம்

இருக்கட்டும் , அவன் குரல்

இனிதே முழங்கட்டும்..



Rate this content
Log in

Similar tamil poem from Abstract