விஜய் சேதுபதி
விஜய் சேதுபதி


விஜய் சேதுபதி தமிழ் திரைப்பட நடிகர்பல படங்களில் சிறப்பாக நடித்து பெருமை பெற்றவர்.
மிகவும் சுறுசுறுப்பானவர் நடிகர்.
ராஜபாளையத்தில் பிறந்தவர். கணக்காளராக வாழ்க்கையை துவங்கியவர் .இப்படி
பல படங்களில் நடித்துப் புகழ் பெற்றிருந்தாலும் இப்போது சன் தொலைக்காட்சியில் நம்ம ஊரு ஹீரோ என்னும் ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் .
நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர். பெருமைகள் இருந்தாலும்மிகவும் எளிமையானவர்.
ரம்மி படத்தை தயாரித்து கொண்டு இருந்தபோது என் கணவரும் அதில் ஒரு பார்ட்னர்.
டைரக்டர் திரு பாலகிருஷ்ணன் அவர்கள் எங்கள் குடும்ப நண்பர்.
பட ஆடியோ ரிலீசுக்கு போனோம் குடும்ப சகிதம்.
என்ன ஒரு அடக்கம்.
சிம்பிளாக மேடையில் உட்காராமல் கீழே மக்களுடன் மக்களாக உட்கார்ந்து இருந்தார். இந்த அடக்கம்தான் மக்கள் செல்வன் என்ற டைட்டிலை அவருக்கு வாங்கித் தந்துள்ளது.
ஒன்றும் இல்லாதவர்கள் எல்லாம் அலட்டிக் கொள்ளும் இக்காலத்தில் இவ்வளவு புகழ் பெற்றுபுகழின் உச்சியில் இருந்தாலும் சிறிதும் மண்டைக்கனம் அற்றவர்.
எனது கணவரும் ஒரு சினிமா தயாரிப்பாளர். சில படங்களை தயாரித்து உள்ளார்.