ஊரடங்கு வேளையிலே தெம்மாங்கு
ஊரடங்கு வேளையிலே தெம்மாங்கு


ஊரடங்கு வேளையிலே
நாங்கடங்கித் தவிக்கிறோமே
கொரோனா கொள்ளை நோயிக் கொன்னுத் தொலைக்குதே!
கொத்துக்கொத்தா மனுஷக்கூட்டம் செத்து மடியுதே!
கோவிலுல சாமியெலாம் ரொம்பநாளாக காணலையே!
வைத்தியரா தாதியரா உருமாறி நிக்குதோ!
(ஊரடங்கு வேளையிலே)
பொழப்புக்கு வழியில்ல
சோத்துக்கு வக்குல்ல
எரியாத அடுப்புக்குள்ள பசிப்பூனைக் வாழுதே!
எரியுற எங்கவயிற பாத்துபயந்துக் கெடக்குதே!<
/p>
ஊருசனம் அண்டாத சேரிக்குள்ள எம்மக்கா!
கைக்கழுவிப் போகாதீங்க என்நாட்டுமக்கா!
(ஊரடங்கு வேளையிலே)
காளியாத்தா மாரியாத்தா
மேரியம்மா ஆண்டவரே
கூப்பாடு போட்டாலும் காத்தருள மாட்டீயளா?
சும்மாடு கூடையிலே ஆக்கொல்லிக் கிருமிகளா?
அழுதழுது மடிஞ்சாலும் நிமிந்து நாங்க எழுந்துருவோம்!
வெள்ளாமை நித்தம்செஞ்சு குறுநோய்க்கும் பொங்கவைப்போம்!
(ஊரடங்கு வேளையிலே)