மெழுகுவர்த்தி
மெழுகுவர்த்தி


மெழுகுவர்த்தியை தியாகி என்பேன்,
தன்னை உருக்கி வெளிச்சம் தந்த பொழுது
மெழுகுவர்த்தியை காதலன் என்பேன்,
அனைந்த தீ கூச்சியினை கண்டு தன்னை தானே உருக்கிக்கொண்ட பொழுது,
மெழுகுவர்த்தியை கவலை தேய்ந்த மனிதன் என்பேன்,
தொலைவில் கானும் பொழுது பிரகாசமாகவும், அருகில் பார்த்தால் அழிந்துக் கொண்டு இருக்கும் பொழுது
நம் சமுதாயத்தில் பல மெழுகுவர்த்திகள் உள்ளன.
மாணவனின் வாழ்வு உயர பென்சில் உருகியது,
கவிஞரின் கற்பனை திறனுக்கு பெனாவின் மை கரைந்தது
சூரியனின் வரவுக்காக இரவு கரைந்தது
பெற்ற குழந்தைக்காக தன் உதிரத்தையை உணவாக்கிய ஒவ்வொரு அன்னையும் மெழுகுவர்த்தியே
ஆசானுக்கு ஆசானாய், குருவுக்கு குருவாகவுமிருந்து, தன் மகனின் உயர்வை மட்டும் நினைக்கும் ஒவ்வொரு தந்தையும் மெழுகுவர்த்தியே
தன் குடும்பத்தின் வாழ்வு உயர வெளிநாடு சென்று உழைக்கும் ஒவ்வொரு மகனும் / மகளும் மெழுகுவர்த்தியே