காதல்
காதல்
மனதின் ஓரத்தில்,
ஒய்யாரமாய் ஆசனம் அமைத்து அமர்ந்திருக்கின்றாய்,
வெளியில் இருந்து காணும் எவருக்கும் கண்களில் விளங்கமாட்டாய்,
மனதினில் அமர்ந்து கொண்டு இம்சை செய்கிறாய்,
உன்னை விட்டு நான் விலகி இருக்க நினைத்தாலும்,
மனம் மறுக்கின்றது உன்னை மறக்க,
இந்த உணர்வுகளை உன்னால் புரிந்துக் கொள்ள இயலாது,
ஏனென்றால் எந்தன் காதல் உந்தன் வாழ்க்கையில் நீ தூக்கி எறிந்து விளையாடும் பொம்மையை போல்,
தூக்கி எறிந்து விட்டாய்,
இதை அறிந்தும் மனம் தாளாமல் தவிக்கின்றது,
என் காதல் நீ புரிந்துக் கொள்ளும் காலம் வரும்,
அதை பகிர்ந்துக் கொள்ளத்தான் நான் இருக்க மாட்டேன்......
