இதயத்தின் எல்லைக்காவல்
இதயத்தின் எல்லைக்காவல்
யாழின் இசையை
தமிழுக்கு
மொழிபெயர்த்து
ஆழி மைக்கொண்டு
ஆகாயத் தாளில்
கவிதை வரையும்
வித்தைக்குச்
சொந்தக்காரி அவள்!!!
நீ
என்ன
என் இதயத்தின்
எல்லைக் காவல் படையா?
உன்னை மீறி
எந்த உருவமும்
பயணிக்க பயப்படுகிறதே!!
அவள் சிரித்தால்
முத்துக்கள் சிதறுமாம்
சுங்கத்துறை கவனத்திற்கு!!
காற்றுவாக்கில் என்னுள்
காதலை விதைத்தாய்..
போகிற போக்கில்
நீயே அறுவடை செய்துகொள்!!
