ஹோலி
ஹோலி
என் பாலைவன சாலையின்
பால் நிலா அவள்
குங்கும சிவப்பு கன்னங்களுக்கு
சொந்தக்காரி அவள்
தங்க மேனி தோற்றமுடையவள்
காற்மேகத்தை தலையில் தாங்குபவள்
பசுமையான நினைவுகளை
என்றும் தருபவள்
பொக்கிஷ மஞ்சளை
நாளும் விரும்புபவள்
வசந்தத்தை அள்ளி தரும்
வண்ணங்களை என் மீது பூசும்
என் வாழ்வின்
ஹோலி அவள்!
