Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

anuradha nazeer

Tragedy Inspirational

4.8  

anuradha nazeer

Tragedy Inspirational

கண்களில் கண்ணீர் சுரக்கிறது.

கண்களில் கண்ணீர் சுரக்கிறது.

3 mins
34.8K


நம்மில் பலர், சின்னச் சின்ன கஷ்டங்களுக்கே நம்பிக்கையிழந்து உடைந்து போய்விடுகிறோம். 'அவ்வளவுதான் வாழ்க்கை' என்று விரக்தியின் உச்சிக்குச் சென்று முடங்கிவிடுகிறோம். இன்னும் சிலர், நம்பிக்கையிழந்து உயிரையே மாய்த்துக்கொள்கிறார்கள்.


அப்படியான மனிதர்களுக்கெல்லாம் லோகநாதன், ஒரு பாடம். இரண்டு வயதில் அவரை துரத்திய துயரம், இதோ, 25 வயதை எட்டியபோதும் விடாமல் விரட்டுகிறது. மின்சாரம் தாக்கி இடுப்புக்கு கீழ் மரத்துப்போக, உறவுகள் அவரை ஒதுக்கித் தள்ளினார்கள். மனம் தளரவில்லை லோகநாதன். படுக்கையில் இருந்துகொண்டே சமைக்கிறார்; சாப்பிடுகிறார்; இயற்கை உபாதைகளைக் கழிக்கிறார்; எல்லாவற்றையும்விட, 'வாழ வேண்டும்' என்ற நம்பிக்கையை, மனசு முழுக்க நிரப்பி வைத்திருக்கிறார்.கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியத்தில் உள்ள வீரமாபாளையத்தைச் சேர்ந்தவர் லோகநாதன்.


ஆஸ்பெட்டாஸ் கூரை வேய்ந்த வீடு. ஒரு பக்கம்தான் மண்சுவர். மூன்று பக்கங்களிலும் தார்பாய்தான் சுவர். உள்ளே கட்டிலில் நைந்த துணியாகப் படுத்திருக்கிறார் லோகநாதன். அந்தக் கோலத்தை பார்த்த நொடியில், லோகநாதன் அனுபவிக்கும் வேதனைகள் நம்மை உருக வைக்கின்றன. தொண்டையை செருமிக்கொண்டு, பேச ஆரம்பிக்கிறார் லோகநாதன். அதனால், இவங்களுக்காவது வாழணும்னு தோணும்.


அதனால், மனசுல நம்பிக்கையைக் கொஞ்சம் கொஞ்சமா சேர்க்க ஆரம்பித்தேன். இப்போ நான் தங்கியிருக்கிறது எங்க அன்ணனோட இடம். என் இடத்துல சின்னதா ஒரு ஓலை குடிசையாவது கட்டணும்... அதுல வாழணும்னு ஆசை இருக்கு. ஆனால், அதுக்காக உழைக்க உடல்திறனும், செலவழிக்க பணமும் இல்லை. தினம் வெந்து நொந்து போறேன். ஆனாலும், வெறும் கட்டாந்தரையில் கிடந்தாவது, என் மிச்சக் காலத்தையும் வாழ்ந்து முடிப்பேண்ணே..." லோகநாதன் கண்களில் கண்ணீர் சுரக்கிறது. 


இரண்டு வருஷம் அங்க சம்பாதிச்ச காசுலதான், வீரமாபாளையத்தில் விலைக்கு வந்த நிலத்தை நானும் எங்கண்ணனும் ஆளுக்கு ஒண்ணு வாங்குனோம். நாங்க குடியிருந்த கரிக்கல்மேடுங்கிற பகுதியில், ஒரு வீட்டுல மின்சார வயர் மரத்துல உரசிக்கிட்டு இருந்துச்சு. அதை வெட்டி அப்புறப்படுத்தச் சொல்லி அந்த வீட்டுக்காரர் கேட்டார்.


நானும் மரத்தில் ஏறி வெட்டினேன். நான் மரத்தில் இருப்பதை பார்க்காம அந்த வீட்டுக்காரர், மெயினை ஆன் பண்ணிட்டார். ஷாக் அடிச்சு தூக்கி வீசிருச்சு. இரண்டு நாள் கழிச்சு கண் முழிச்சப்ப, இரண்டு கால்லயும் அசைவில்லை. முதுகுத்தண்டு உடைஞ்சு கூழ்போல ஆகிட்டதாகச் சொன்னாங்க. என்னை மரக்கிளையைக் கழிக்கச் சொன்னவர், இரவோடு இரவாக குடும்பத்தைக் காலி பண்ணிக்கிட்டு போயிட்டதா சொன்னாங்க.


மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைச்சுட்டுப் போனாங்க. 15 நாள் அங்கே இருந்தேன். வெறும் ட்ரிப்ஸ்தான் போட்டாங்க. அதனால், பக்கத்துல உள்ள தனியார் மருத்துவமனையில் காண்பிச்சோம். அங்க உள்ள மருத்துவர் ஒருத்தர், எங்க நிலைமையைப் பார்த்து இரக்கப்பட்டு 80,000 ரூபாய் செலவுல முதுகுல ஆபரேஷன் பண்ணி, ஸ்டீல் வச்சார்.


'ஆறு மாசம் கழிச்சு வாங்க. வேற நரம்பு மாத்தினா, பழையபடி காலில் உணர்ச்சி வந்திரும்'னு சொல்லி அனுப்பிட்டார். அந்த 80,000 ரூபாயையும் அண்ணன் வட்டிக்குத்தான் வாங்கியிருந்தார்.


வீட்டுக்கு அழைச்சுக்கிட்டு வந்த அண்ணன், ’வாங்கின கடனை என்னால அடைக்க முடியாது, உன் பெயர்ல உள்ள பிளாட்டை என் பேருக்கு எழுதிக்கொடு'னு மிரட்டினார். நான் ஆடிப்போயிட்டேன். கொஞ்சநாள் பொறுத்துக்கோ... குணமானதும் பணத்தை ரெடி பண்ணிக் குடுத்துடுறேன்னு சொன்னேன். கேக்கலே... இப்பவே வட்டியோட செலவு பண்ண பணத்தை எடுத்து வையின்னு சண்டை போட்டார்.சேலத்துல பூர்வீக நிலத்தை வித்து அதுல கிடைச்ச என்னோட பங்கு பணம் ஒரு லட்சத்தை எடுத்துக்கிட்டார்.


நாலு வருஷம் வரை அவர் என்கூட இருந்தார். அடிக்கடி என்னை அடிப்பார். எங்க அப்பாவும் என்னைக் கட்டிலோட சேர்த்து தூக்கி வெளியில் போடுவார். சமைக்கிறது, இயற்கை உபாதைகளைக் கழிக்கிறதுன்னு எல்லா வேலைகளையும் படுத்துக்கிட்டே செய்யப் பழகிகிட்டேன். என்னோட நிலைமையைப் பார்த்துட்டு, அக்கம்பக்கத்துல உள்ளவங்க எனக்கு உதவி பண்ண வருவாங்க. அவங்களையும் அப்பா அடிச்சு துரத்திடுவார். ஒருநாள் சண்டை அதிகமாகி அண்ணன் என்னைக் கட்டிலோடு சேர்த்து உதைச்சு தள்ளிட்டார்.


கீழே விழுந்ததுல முதுகு பகுதியில் வச்சுருந்த ஸ்டீல் சதையைப் பிய்ச்சுக்கிட்டு, நாலு இடங்களில் வெளியே தெரிய ஆரம்பிச்சிருச்சு. என்னை டாக்டர்கிட்டகூட கூட்டிக்கிட்டுப் போகல... 'உனக்கும் எனக்கும் இனி ஒட்டும் இல்லை; உறவும் இல்லை'ன்னு வெட்டிக்கிட்டு, தரகம்பட்டி போய் தங்கிட்டார் அண்ணன்.


ஆனா, எங்கப்பா என்னை வதைக்க ஆரம்பித்தார். இந்த ஊரைச் சேர்ந்தவங்களும், இங்கே ஆடுமாடு மேய்க்க வர்றவங்களும் எனக்கு அரிசி, பருப்பு வாங்கித் தருவாங்க. தினமும் தண்ணீர் பிடிச்சு வைப்பாங்க. ராணுவத்தில் வேலை செய்ற ராஜ்குமார்ங்கிறவரும் அவரோட சகோதர்களும் எனக்கு உதவுவாங்க. இயற்கை உபாதைகளைக் கழிக்க பயன்படுத்துற டியூப்புகளை வாங்கித் தருவாங்க.


அதேபோல், இங்க பிளாட் பார்க்க வர்றவங்க, என் நிலைமையைப் பார்த்துட்டு 50, 100-னு பணம் தருவாங்க. ஆனா, அதையும் எங்க அப்பா அடிச்சு பிடுங்கி குடிச்சு அழிச்சுருவார். இரண்டு வருஷத்துக்கு முன்னாடி எங்கப்பா குடல் வெந்து செத்துப் போயிட்டார். எனக்கு சொட்டுக் கண்ணீர்கூட வரலை. ஆனால், தனியே விடப்பட்டேன். குளிக்கிறது, பல்லு விலக்குறது, சமைக்கிறது, சாப்பிடுறதுன்னு எல்லாம் படுக்கையிலேயே நானே செய்யணும். ஒரு குச்சியால வேண்டிய சாமான்களைத் தள்ளி எடுத்து, வேலை செய்வேன். ஒவ்வொருமுறையும் நரக வேதனையாக இருக்கும்.


ஒருநாள் தூங்கிகிட்டு இருந்தப்ப, என் கால்களை எலிகள் கடிச்சிருச்சு. எனக்கு உணர்ச்சி இல்லாததால அப்போ தெரியலை. காலையில் எழுந்தப்ப, கால்கள்ல இருந்து ஏதோ வாடை வந்துச்சு. அப்பதான் எலி கடிச்சிருந்தது தெரிஞ்சுச்சு. அந்தக் கணம், 'இந்த வாழ்க்கை தேவையா?'னு நினைச்சேன். ஆனால், அடுத்த நொடியே, 'நான் வாழணும். நம்மை உதாசீனப்படுத்தும் உறவுகளுக்கு மத்தியில் நிமிர்ந்து வாழணும்'னு தோணுச்சு.


அப்பா, அண்ணன், அக்கான்னு அரணா இருக்க வேண்டிய உறவுகள் என்னை உதாசீனப்படுத்தியிருக்கலாம். ஆனால், இந்தக் கிராமத்தில் தாத்தா, பாட்டி, அம்மா, அப்பா, அண்ணன், அக்கா, மாமன், அத்தைனு பல உறவுகள் எனக்காக கரிசனம் காட்ட இருக்காங்க. இங்க ஆடுமாடு மேய்க்க வர்ற ஒருத்தரோட நாய்கூட என்கிட்ட வாலை ஆட்டி பாசம் காட்டுது. நான் வளர்க்குற இரண்டு கோழிகள்கூட, என்னைச் சுத்தித் சுத்தி வந்து பிரியத்தை காட்டுதுங்க.அதனால், இவங்களுக்காவது வாழணும்னு தோணும்.


அதனால், மனசுல நம்பிக்கையைக் கொஞ்சம் கொஞ்சமா சேர்க்க ஆரம்பித்தேன். இப்போ நான் தங்கியிருக்கிறது எங்க அன்ணனோட இடம். என் இடத்துல சின்னதா ஒரு ஓலை குடிசையாவது கட்டணும்... அதுல வாழணும்னு ஆசை இருக்கு. ஆனால், அதுக்காக உழைக்க உடல்திறனும், செலவழிக்க பணமும் இல்லை. தினம் வெந்து நொந்து போறேன். ஆனாலும், வெறும் கட்டாந்தரையில் கிடந்தாவது, என் மிச்சக் காலத்தையும் வாழ்ந்து முடிப்பேண்ணே..." லோகநாதன் கண்களில் கண்ணீர் சுரக்கிறது. 




Rate this content
Log in

Similar tamil story from Tragedy