Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

anuradha nazeer

Inspirational

4.7  

anuradha nazeer

Inspirational

சிரமாறு உடையான்

சிரமாறு உடையான்

1 min
268


ஒரே வரியில் அத்தனை தெய்வங்களையும் வர்ணிக்க முடியுமா?ஆம் .. முடியும்

" சிரமாறு உடையான் " 

1. சிரம் மாறு உடையான் - தலையது மாறி   வேழத்தின் சிரம் அமைந்த விநாயகனைக்குறிக்கும்

2 . சிரம் ஆறு(6)உடையான் - ஆறு முகம்  படைத்த சுப்பிரமணியத்தைக்குறிக்கும்

3 . சிரம் ஆறு உடையான் - சிரத்தில் கங்கையை கொண்ட சிவனைக்குறிக்கும்

4 . சிரம் மாறு உடையான் - சிரமது முன்னும் பின்னும் உள்ள நான் முகனாம்பிரம்மாவைக்குறிக்கும்

5. சிரம் ஆறு(river) உடையான் - காவிரி ஆற்றில் தலை வைத்து சயனித்திருக்கும்  ஸ்ரீ ரங்கநாதரைக்குறிக்கும் ஆஹா! என்னே நம் மொழியாம் தமிழ்..


Rate this content
Log in

Similar tamil story from Inspirational