STORYMIRROR

anuradha nazeer

Classics

3  

anuradha nazeer

Classics

அதிசய நந்தி

அதிசய நந்தி

1 min
183

முன்பக்கம் மனித உருவம், பக்கவாட்டில் காளை உருவம் கொண்ட அதிசய நந்தி உள்ள சிவன் கோயில்!

சிவனின் வாகனமான நந்தி பொதுவாக சிவன் கோயிலில் சிவனுக்கு முன் அமைந்திருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால் அவர் காளை ரூபத்தில் இருப்பதைத் தான் பார்த்திருப்போம். படங்களில் வேண்டுமானால் நாம் மனித உடல் அமைப்பும், தலை மட்டும் காளை போன்ற உருவத்தில் இருக்கும் நந்தியை பார்த்திருப்போம்.

சில சிவ தலங்களில், நந்தி அதே போன்று நின்ற வடிவத்தில், கும்பிடுவது போன்ற அமைப்பையும் பார்த்திருப்போம். ஆனால் மகாராஷ்டிரா பாடேஸ்வர மகாதேவ் திருக்கோயிலில் வித்தியாசமான நந்தி சிலை அனைவரையும் வியக்க வைக்கும் விதத்தில் உள்ளது.


பாடேஸ்வர் மகாதேவ் கோயில்:××××××××××××××××××××××××××××××××மகாராஷ்டிராவின், சதாரா மாவட்டத்தில் உள்ள பாடேஸ்கிராமத்தில் அருள்மிகு. பாதேஸ்வர் மகாதேவ் திருக்கோயில் அமைந்துள்ளது.இங்கு பல குகைகளுடன் உள்ள பெரிய வளாகம் உள்ளது. இதில் 8 பெரிய குகைகளும், பல சிறிய அளவிலான குகைகளும் உள்ளன. 16ம் நூற்றாண்டை சேர்ந்தவையாக இருக்கலாம் என தொல்பொருள் ஆராய்சியாளர்கள் கூறுகின்றனர்.

சிற்ப வேலைப்பாடு :--×××××××××××××××××××××××நம் தமிழ்நாட்டிலேயே பல சிவ தலங்களில் 1000க்கும் அதிகமான நந்தி சிலைகளுடன் கூடிய கோயில்கள் உள்ளன. அந்த வகையில் 1000 சிவ லிங்கங்களை கொண்ட ஒரு அற்புத தலமாக இந்த பாதேஸ்வர் மகாதேவ் திருக்கோயில் விளங்குகின்றது.


இந்த கோயிலில் செய்யப்பட்டுள்ள சிற்ப வேலைப்பாடுகள் மிகவும் பிரசித்தி பெற்றும், தனித்தன்மையுடனும் இருக்கின்றன. இங்குள்ள ஒரு அதிசய நந்தியே இதற்கு சான்றாக கூறலாம்.


 *அதியசய நந்தி:*

இங்குள்ள ஒரு சிறிய குகையில் அமைந்துள்ள நந்தி முன் புறம் பார்க்க மனித வடிவில் யோக நிலையில் அமைர்ந்திருப்பது போன்றும், அதன் பின்புறம் பார்த்தால், நாம் சாதாரணமாக சிவ தலங்களில் பார்க்கக்கூடிய நந்தி அமர்ந்திருப்பது போன்ற தோற்றத்தையும் கொடுக்கும் அளவிற்கு வியக்க வைக்கும் விதத்தில் உள்ளது.

பக்கவாட்டில் பார்த்தால் நந்தியின் முன்னங்கால், மனித முன்னங்கால் இரண்டும் பொருந்தும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

நந்தி சிலையின் சிறப்பம்சங்கள்:இந்த நந்தி சிலை 7 கரங்களுடன் காணப்படுகின்றது. வலது பககத்தில் நான்கு கைகளும், இடது பக்கத்தில் மூன்று கைகளுடன் காணப்படுகின்றது.


Rate this content
Log in

Similar tamil story from Classics