Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Deepa Sridharan

Drama

4.5  

Deepa Sridharan

Drama

அப்பா

அப்பா

1 min
23.1K


பரண் மேல் அடுக்கிவைத்த

பழைய செய்தித் தாள்களாய்

மடிப்பு கலையாத அனுபவங்கள்

தூசி தட்டிய நாசியாய்

கூச்சலிட்டு சிலிர்க்குது- அப்பா!


இறுக்கிக் கட்டிய வேட்டித்தடமும்

வெடித்துச் சிதறிய பாதரணமும்

உன்னைப்போல் ஓடும் காலச்சக்கரமும்

நான் மிதிவண்டி பழகிய கதை

என்றும் நான் வீழமாட்டேன்- அப்பா!


புத்தாடை நான் உடுத்த

பட்டாக நீ ஜொலிப்பாய்

“என்வீட்டு ராசகுமாரி”

“உனக்கென்ன பேரழகி”

இன்றும் உன்சாயல் கண்ணாடியில்- அப்பா!


எட்டுகட்டி அளந்த கதைக்கெல்லாம்

உச்சுகொட்டி மெச்சிகட்டி

நீ அளந்த முத்தம்

அதன் ஈரம் மொத்தம்

இன்னும் என் இமைகளில்- அப்பா!


சுனாமியாய் மனித அலை

தேர் உள்ளே அம்மன் சிலை

திருவிழாவோ முடிந்து போச்சு

தோளமர்ந்து கண்ட காட்சி

இன்றும் தோரணமாய் தொங்குது- அப்பா!


இளையராஜாவும் சோபனாரவியும்

இடைவிடாது சண்டைபோட

நீ விட்டுக்கொடுத்த தொலைக்காட்சியில்

இன்று “live news” யார் வாசித்தாலும்

 ஏனோ “உன் voice” தான் கேட்கிறது- அப்பா!


அன்பா பண்பா

உழைப்பா சகிப்பா

தவிப்பா அணைப்பா

அப்பப்பா எதைச்சொல்வதப்பா

உனக்கீடு யாருமில்லை அப்பா!



Rate this content
Log in

Similar tamil poem from Drama