STORYMIRROR

Vijayalakshmi Radhakrishnan

Inspirational

4  

Vijayalakshmi Radhakrishnan

Inspirational

ஆசான்

ஆசான்

1 min
352

உலகம் என்பது 

ஒரு புத்தகம் – அதில் 

வாழ்கை என்னும் பாடத்தில் 

நாங்கள் தேர்ச்சி பெற 

தினந்தினம் போராடும் நீங்கள் 

ஒரு ஆசிரியர் அல்ல !


எங்கள் உயிருக்கு 

ஜனனம் தந்தவள் தாயென்றால்

எங்கள் அறிவுக்கு 

ஜனனம் தந்த நீங்களே – எங்களின்

இரண்டாவது தாய் !


எங்களை தோளில் சுமப்பது 

எங்கள் தந்தை என்றால் – அனுதினமும்

எங்களின் நினைவுகளை 

நெஞ்சில் சுமக்கும் நீங்களே

எங்களின் இரண்டாவது தந்தை!


தோளில் கைபோட்டு 

சிரித்து மகிழவைப்பவன் தோழனென்றால்

சோர்ந்து கிடக்கும் எங்களுக்கு தோள் கொடுக்கும் நீங்களே

எங்களின் முதல் தோழன் !


எங்களை படைத்த பிரம்மன் 

ஒரு தெய்வம் என்றால் 

எங்களின் அறிவை செதுக்கிய – நீங்களே

எங்களின் முதல் தெய்வம் !


எங்கள் வாழ்வில் 

ஒரு தாயாகவும் , தந்தையாகவும் 

நண்பனாகவும் ,

நல்ல ஆசிரியராகவும் 

எங்களை வழிநடத்திச் செல்லும்

உங்கள் பாதத்தை தொட்டு வணங்குகிறோம் 

உங்களின் மாணவராக அல்ல 

உங்களின் குழந்தைகளாக!


Rate this content
Log in

Similar tamil poem from Inspirational