பூமி
பூமி
எப்போதும் நம்மை அன்போடு மடியில் ஏந்தி கொள்ளும்,
நாம் வீழ்ந்தாலும் வாழ்ந்தாலும்,
நாம் வெறுத்தாலும்,
எத்தனை துன்பங்கள் நாம் கொடுத்தாலும்,
நம்மை எப்போதும் கை விடுவதில்லை,
ஆனால் ஒவ்வொரு முறையும்
ஆறுதலாகி,
தாயாகி,
நமக்கு நம்பிக்கை கொடுக்கும்
வாழ்வதற்கான தைரியத்தை அளிக்கும்
நாம் பிறந்ததிலிருந்து சாகும் வரை.........
