போர்களமாய் உன் வாழ்க்கை!!
போர்களமாய் உன் வாழ்க்கை!!
விரக்தியில் நீ!
சுற்றெங்கிலும் தீப்பொரி சிதற...
மரண பயம் உன்னைச் சூழ...குழப்பத்தின் உச்சம் அடைய...
வாழ்க்கையின் புதிர் முடிச்சுகள், மேலும் வழுவாக...
வாழ்க்கையே போர்களமாய்...தன்னந்தனியே நீ!
நினைவில் கொள்!
வலிய வீரனுக்கென்றே போர்களம் உருவாக்கப்படுகிறது!
வெறும் கோழைக்கு அல்ல!!!
உன்னுடைய தகுதி பெரியது! அதை புரிந்துக் கொள்ள தாமதிக்காதே!
மனுஷனாய், மனிதத்தின் மறுரூபமாய் நீ வாழ்!!!
எதிர்நோக்கு, உன் கால்த்டத்தில்...பொற்காசுகள்! ஆனால் தூரத்தில் உயிருக்கு போராடும் எதிரி நாட்டு வீரன்!
என்ன முடிவு? உன் முடிவை பொறுத்தே இந்த உலகம் உன்னை நிச்சையிக்கிறது!
உன் சிந்தனைகளே நீ யார் என்பதை சொல்லும்!
தெளிவுபடுத்து...உன் பாதையையும்,மனதையும்...
அது உன்னை சரியான பாதையில் கூட்டிச் செல்லும்!