ஒற்றை வார்த்தை
ஒற்றை வார்த்தை
ஒரு வார்த்தையே போதுமானது,
உன்னை பற்றி விவரிக்க,
அன்பு,
இதுவே அந்த ஒற்றை வார்த்தை,
இதை தவிர்த்து வேறு எந்த வார்த்தையிலும் உன்னை விவரிக்க இயலாது,
எல்லோரிடத்திலும் நீ காண்பிக்கும் அன்பு உன்னை அழகாய் காண்பிக்கிறது,
உன்னை உண்மையாக காண்பிக்கிறது,
அதுவே எல்லோரையும் உன்னிடம் ஈர்த்து வருகிறது,
உன்னை சுற்றி ஒரு கூட்டம் இருந்துக் கொண்டே இருக்கிறது,
உனக்காக எதையும் செய்யும் அளவிற்கு அவர்களை விரும்ப வைக்கிறது,
உன்னில் இருக்கும் தாய்மையை அவர்கள் உணர்ந்ததால்......
