STORYMIRROR

KIRAN M

Inspirational

4  

KIRAN M

Inspirational

முயற்சி

முயற்சி

1 min
9

நடக்கும் என்று 

நினைத்துக் கொண்டு 

நடக்கும் என்பதில் நம்பிக்கை 

வைத்துக் கொண்டு 

விடா முயற்சி செய் வெற்றி 

நிச்சயம் ஒரு நாள் 

உன்னை தேடி வரும்.


தன்னால் முடியாது என்று 

நினைப்பவன் வெற்றி பெற 

தவறிவிடுகிறான்.. தன்னால் 

முடியும் என்று நம்ம்பிக்கை 

வைத்து முழு முயற்சியோடு 

பாடுபடுபவன் மற்றவர்கள் 

விட்ட வெற்றியையும் சேர்த்து 

பெற்றுக் கொள்வான்.


மண்ணில் விழுவது 

அவமானம் இல்லை 

விழுந்தால் முயற்சி செய்து 

விதையாக மாறி பெரு 

விருட்சமாக எழு.


உன்னால் முடியும் வரை 

முயற்சி செய்.. உன்னால் 

முடியாது போனால் 

பயிற்சி செய்.


முயற்சி செய்ய சிறு 

நொடி கூட தயங்காதே 

முயற்சி செய்யும் போது 

தடைகளும் உன்னை 

தலை வணங்கும்.


முயற்சி என்பது விதை 

போல அதை விதைத்துக் 

கொண்டே இரு விதைத்தால் 

மரம் இல்லையேல் 

நிலத்திற்கு உரம்.


உன் முயற்சிகள் உன்னை 

பல முறை கைவிட்டாலும் 

நீ ஒரு போதும் முயற்சியை 

கைவிடாதே.. முயற்சி தான் 

உனக்கான வெற்றியை 

உன்னிடம் அழைத்து வரும்.


Rate this content
Log in

More tamil poem from KIRAN M

Similar tamil poem from Inspirational