Hurry up! before its gone. Grab the BESTSELLERS now.
Hurry up! before its gone. Grab the BESTSELLERS now.

anuradha nazeer

Action


4.9  

anuradha nazeer

Action


கடல் கன்னி பார்ட் 1

கடல் கன்னி பார்ட் 1

3 mins 278 3 mins 278

கடல் கன்னி பார்ட் 1

உத்திரபிரதேசம் சாரான்பூரை சேர்ந்த 22 வயதுமிக்க ஓர் இளம் தாய் தனது குழந்தயை பார்க்க ஆவலாக இருந்தார். அப்போது தான் அந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்தது. ஏனெனில், கர்ப்பமாக இருந்த போது எடுத்த எந்த ஒரு ஸ்கேன் ரிப்போர்டிலும் இது போன்ற நிகழ்வை அவர்கள் காணவில்லை. ஆம்! குழந்தை கடற்கன்னி போன்ற உருவத்தில் இரு கால்களும் ஒட்டியிருந்த நிலையில் பிறந்திருந்தது.

குழந்தையை பார்த்த மருத்துவர்களுக்கும் இது அதிர்ச்சியை அளித்தது. அவர்கள் இதற்கு முன் இப்படி ஒரு நிகழ்வை கண்டிருக்க வாய்ப்பே இல்லை. ஆபரேஷன் செய்த மருத்துவர்களுள் ஒருவர் இது ஒரு அரியவகை மருத்துவ நிகழ்வு. குறைபாடுடன் பிறக்கும் ஒட்டி பிறப்பவர்கள் போன்ற நிகழ்வாக தான் இருக்க கூடும் என கூறினார்.


குழந்தை காண ஒரு மீன் போன்ற உருவம் பெற்றிருந்தது. இரண்டு கால்களும் இணைந்து இருந்தது. மேல் உடல் சாதாரண குழந்தை போலவும், கீழ் உடல் மட்டும் மீனை போலவும் இருந்தது. கீழ் உடல் முழுமையாக வளராத நிலையில் இருந்தது

இந்த அதிசய குழந்தை பிறக்கும் போதே Sirenomelia எனப்படும் அரியவகை கடற்கன்னி கோளாறுடன் பிறந்துள்ளது. இது கண்டிப்பாக உயிருக்கே ஆபத்தான நிலையாக கூட அமையலாம் என பெற்றோரிடம் கூறினார்கள்.

உலகில் இது போன்ற சம்பவம் இதற்கு முன்னர் மூன்று முறை நடந்துள்ளது. இது நான்காவது முறையாகும். இந்த குழந்தை பிறந்த 10 நிமிடத்தில் இறந்து விட்டது என்பது அந்த பெற்றோரை மீளா துயரத்தில் ஆழ்த்தியது.

குழந்தையை பார்த்த மருத்துவர்களுக்கும் இது அதிர்ச்சியை அளித்தது. அவர்கள் இதற்கு முன் இப்படி ஒரு நிகழ்வை கண்டிருக்க வாய்ப்பே இல்லை. ஆபரேஷன் செய்த மருத்துவர்களுள் ஒருவர் இது ஒரு அரியவகை மருத்துவ நிகழ்வு. குறைபாடுடன் பிறக்கும் ஒட்டி பிறப்பவர்கள் போன்ற நிகழ்வாக தான் இருக்க கூடும் என கூறினார்.

தொலைக்காட்சியில் செய்திகள் பார்த்துக்கொண்டிருந்தாள் அருணா.இந்த செய்தியை பார்த்துக் கொண்டே இருந்த போது அவள் கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக கொட்டியது.

கல்யாணம் ஆகி மூன்று வருடங்களாகி விட்டது .அவளுக்கு இன்னும் குழந்தை பிறக்கவில்லை .வீட்டில் மாமியார், ஏண்டிஉன்னுடன் கல்யாணமானவர்கள் எல்லாம் 

3 குழந்தைகள் பெற்றுவிட்டார்கள் .நானெப்படி பாட்டியாவது என்று சதா புலம்பல்

வேறு .

எல்லோருக்கும் கல்யாணமாகி ஒன்பது மாதத்தில் குழந்தைகளை பெற்று விடுகிறார்கள் .நீ மட்டும் என்ன மூன்று வருடமாகியும் குழந்தை பிறக்காமல் இருக்கிறதே. டாக்டரிடம் போய் செக்கப் செய்து வருவோமா என்று சதா அரற்றிக் கொண்டே இருந்தார்கள் . இதனால் மிக மிகவும் மனம் வருந்தினாள். என்ன செய்வது? என்றே புரிய வில்லை. அவள் கணவன் அவள் மீது மிகவும் உயிராக இருந்தான்.

என்ன செய்வது? மாமியார் என்பது அந்த ஸ்தானத்தை அவளால் மறுக்க முடியவில்ல.

அழுது கொண்டே .எப்ப தூங்கினாள், தெரியாது .

தேவதை அல்லது  கடல் கன்னி பெண் பால் . ,, ஆண்பால் மெர்மன்,

தலை மற்றும் மேல் உடல் இடுப்பு வரை ஒரு மனிதனைப் போன்றும், இடுப்புக்கு கீழ் பாகம் ஒரு மீனின் வால் ஆகியவற்றைக் கொண்ட ஒரு கற்பனையான கடல் உயிரினம். இதே போன்ற தெய்வீக மனிதர்கள் பண்டைய புராணங்களில் உள்ளனர்.


ஒரு மன்னன் குதிரை மீது ஏறி காட்டுக்கு வேட்டையாட போய்க்கொண்டு இருந்தான். போகும் வழியில் அவன் குதிரைக்கு ஒரே தாகம்.  களைப்பாகி தாகத்தால் கனைத்தது 

 மன்னனுக்கு என்ன செய்வதென்றே? தெரியவில்லை .வழி எங்கும் தேடித் திரிந்தான். எங்கேனும் தண்ணீர் கிடைக்கிறதா என்று .ஆனால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு குளமோ, குட்டையோ, ஆறோ ,  நதியோ, எரியோ ,நீர் வீழ்ச்சியோ 

 ,நீர்நிலைகளோ கண்ணில் தென்படவே இல்லை.


குதிரையோ தாகத்தால் தடுமாரியது . எதிரே வந்த ஒரு அழகிய இளம்பெண் மேல் இடறி விழுந்தது .குதிரையுடன் மன்னனும் கீழே விழுந்தான் .அந்த அழகியும் கீழே விழுந்தாள் .மன்னன் ஒருவாறு சமாளித்துக் கொண்டு எழுந்து நின்று மன்னிக்க வேண்டும் பெண்மணியே, ஏதாகிலும் அடிபட்டதா??? உனக்கு உதவி செய்யட்டுமா??? என்று மிகவும் பணிவுடன் கேட்டான் .அதெல்லாம் ஒன்றுமில்லை, அடிபடவில்லை. எனவே ஒரு உதவியும் தேவை இல்லை என்றாள் அந்த அழகிய இளம் பெண்.


நீங்க உண்மையிலேயே நல்லா இருக்கீங்களா உங்களுக்கு ஒன்றும் அடி படவில்லையா உங்களால் பேச முடியுமா?? மன்னன் அந்த பெண்ணின் வசீகரத்தில் மயங்கி கட்டுண்டு என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசி நின்றான் .என்ன ஆயிற்று உங்களுக்கு??? ஏன்??? இந்த தடுமாற்றம்.. அவள் தன் அழகான கொட்டைப்பாக்கு போன்ற கண்களை சிமிட்டி புன்னகையுடன் கேட்டாள் .வெள்ளை சருமமும் பளபளப்பான கண்களும் கோலி குண்டு போல் சூரிய ஒளியில் மின்னி மின்னி பளிச்சிட்டன .அவனுக்கு ஒரு கணம் ஒன்றும் புரியவில்லை .எடுப்பான கூர்மையான மூக்கு.


காற்றில் அலை பாய்ந்த சுருள் சுருளான கருங் கூந்தல். யார் இவள் மானிடப்பிறவியா??? கடல்கன்னி, அல்லது கடவுளின் அம்சமா ???தேவலோக ரம்பையா??? ஊர்வசி ,மேனகை, திலோத்தமையா???


அவர்கள் வரிசையில் இவரும் ஒன்றா??? இல்லை இந்திரலோகத்தில் இருந்துவந்த


இந்திராணியா??? அவன் 

மண்டையில் அவள் அழகு  சுரீர் என்று உரைத்தது .அவன் அவள் காதலில் விழுந்தான். அழகிய பெண்ணே வழி தவறி வந்து விட்டீர்களா ????தாங்கள் .

தங்கள் பெயர் என்னவோ?? தாங்கள் என்ன எப்படி இங்கு வந்தீர்கள் என்று கனிவுடன் கேட்டான் மன்னன்.

அவளோ யாரிந்த பேரழகன் ??

தேவலோக மன்மதனோ ???  கந்தர்வ   புருஷனோ ???

கண்களில்   காந்தம் மீசையில் ஒரு கம்பீரம் ,

கட்டழகு  கண்ணனிவன் , வாட்டசாட்டம் ,

கையிலொரு மன்மத பாணம் மட்டுமே இல்லை .

மிகு ந்த வசியக்காரன் .

என தன் நிலை மறந்தாள் .

தங்கள் பெயர் என்னவோ?? என்று கனிவுடன் கேட்டான் மன்னன்.Rate this content
Log in

More tamil story from anuradha nazeer

Similar tamil story from Action